பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

இந்திய சந்தையில் பிரபலமான எஸ்யூவி மாடலாக உள்ள கியா செல்டோஸ் காரை கேரளாவில் சிவப்பு மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் செல்டோஸ் எஸ்யூவி மாடல் உடன் சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகமானது. மேலும் இந்நிறுவனத்தில் இருந்து இதுவரை இந்த ஒரு கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

இருப்பினும் இந்த காருக்கு மிக பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பு கிடைத்ததால் கடந்த மாத விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களை முந்திய கியா நிறுவனம் தற்சமயம் இந்திய மார்க்கெட்டில் கார்களின் விற்பனையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

மேலும் இந்த எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து வருவதை சமீப காலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவில் உள்ள பெர்ஃபாமனா என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் ஒன்று செல்டோஸ் மாடலின் பெயிண்ட் மற்றும் உட்புற பாகங்களை மாற்றியமைத்துள்ளது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

வழக்கமான சிவப்பு நிறத்திற்கு பதிலாக, பளபளப்பான சிவப்பு நிறமும், ரூஃப் மற்றும் ரூஃப்-ஐ காருடன் இணைக்கும் நான்கு பில்லர்களுக்கும் கருப்பு நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சக்கரங்களின் ரிம்கள், பின்புற பம்பர் மற்றும் முன்புற லோயர் பம்பர் போன்ற முக்கியமான சில பாகங்களுக்கும் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

சக்கரங்களின் ரிம்களுக்கு கருப்பு நிறம் கொடுத்தது மட்டுமில்லாமல், சக்கரமும் 19 இன்ச்சிற்கு அகலமாக பொருத்தப்பட்டுள்ளதால் இந்த கியா செல்டோஸ் எஸ்யூவியின் இந்த டாப் வேரியண்ட் கார் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது. மேலும் க்ரில் பகுதிக்கும் கருமையான நிறத்தை கொடுத்துள்ள கஸ்டமைஸ்ட் நிறுவனம், இந்த நிறத்தை காரின் முன்புறத்தில் உள்ள சில பாகங்களுக்கும் தொடர்ந்துள்ளது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

இருக்கையை மூடியுள்ள துணி உள்பட காரின் உட்புறம் முழுவதும் வெளிப்புறத்திற்கு ஏற்றவாறு சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் மற்றும் பெயிண்ட் மாற்றங்களை தவிர்த்து என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செல்டோஸ் எஸ்யூவியில் வழக்கமாக பொருத்தப்படுகின்ற என்ஜின் தான் இந்த கஸ்டமைஸ்ட் காரில் உள்ளது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

கியா நிறுவனம் செல்டோஸ் காரில் பெட்ரோல், டீசல் என இரு என்ஜின் தேர்வுகளையும் வழங்கியுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டில் உள்ள நான்கு சிலிண்டர் அமைப்புடன் உள்ள 1.5 லிட்டர் என்ஜின் 115 பிஎச்பி பவரையும் 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

டீசல் வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ என்ஜின் அதே 115 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்டான ஜிடி லைன் ட்ரிம்மிற்கு மட்டும் கூடுதலாக 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

140 பிஎச்பி பவரையும் 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த என்ஜினுடன் நிலையாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கூடுதல் தேர்வாக 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படுகிறது. மேலும் கியா நிறுவனம் செல்டோஸ் மாடலை தொடர்ந்து அடுத்த வருட துவக்கத்தில் எம்பிவி பிரிவில் கார்னிவல் மாடலை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

இதனால் இந்த கார் தற்சமயம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட கார்னிவல் காரின் முழு தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

பளபளக்கும் கியா செல்டோஸ்... புத்தம் புதிய நிறத்திற்கு மாற்றியமைத்துள்ள வாடிக்கையாளர்

கியா செல்டோஸ் எஸ்யூவியை இவ்வாறு கஸ்டமைஸ்ட் செய்வதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு ஆனது என்பது குறித்த தகவல் எதும் வெளியாகவில்லை. அதே போல் கேரளாவை சேர்ந்த எந்த வாடிக்கையாளர் இவ்வாறு காரை கஸ்டமைஸ்ட் செய்துள்ளார் என்பதற்கும் பதில் இல்லை. இதுபோன்று கடந்த மாதத்தில் கூட வட இந்திய நிறுவனம் ஒன்று செல்டோஸ் மாடலின் உட்புறத்தை முழுவதும் உயர் தரத்தில் மாற்றியமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 21, 2019, 16:17 [IST]
English summary
This Modified Dual-Tone Kia Seltos Looks Dynamic And Sporty
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+