புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. செல்டோஸ் என்ற எஸ்யூவி காரை முதலாவது மாடலாக களமிறக்க உள்ளது. அண்மையில் இந்த புதிய எஸ்யூவி வகை காரை இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்தது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

அடுத்த மாதம் 22ந் தேதி புதிய கியா செல்டோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், வரும் 15ந் தேதி முதல் புதிய கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு துவங்க இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

வரும் 15ந் தேதி முதல் செல்டோஸ் காருக்கு முன்பதிவு துவங்கலாம் என்று டீலர்களிடம் கியா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட இருக்கிறதாம்.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் இறுதியிலிருந்து காரை டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 160 நகரங்களில் திறக்கப்பட்டு இருக்கும் கியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மூலமாக செல்டோஸ் கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

புதிய கியா செல்டோஸ் காரின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும்.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

புதிய கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடி இணைய வசதி, 360 டிகிரி கேமரா, சன்ரூஃப் மற்றஉம் போஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய சிறப்பம்சங்களை பெற்று வர இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

கியா செல்டோஸ் கார் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த கார் ஒற்றை மற்றும் இரட்டை வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய கியா செல்டோஸ் காருக்கான புக்கிங் எப்போது துவங்குகிறது?

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுடன் இந்த புதிய எஸ்யூவி போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2019, 16:08 [IST]
English summary
According to media reports, Kia Motor to start bookings for Seltos SUV in India from July 15, 2019
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+