செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

இந்த ஆண்டு அறிமுகமான புதிய கார்களில் சூப்பர் ஹிட் மாடலாக கியா செல்டோஸ் மாறி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வந்த கியா செல்டோஸ் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோமொபைல் துறை மந்தமாக இருக்கும் நிலையிலும், இதுவரை 60,000 முன்பதிவுகளை குவித்து அசத்தி இருக்கிறது.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

பொதுவாக புதிய நிறுவனங்களிடமிருந்து வரும் புதிய கார்கள் சந்தைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் தயக்கத்துடனே அந்த தயாரிப்பை வாங்குவர். ஆனால், இந்த மரபையும் கியா செல்டோஸ் கார் உடைத்தது. இந்த சூழலில், முன்பதிவு குவியும் அளவுக்கு இணையாக கியா செல்டோஸ் கார் மீதும், நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மீதும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த கார் மீதான நன்மதிப்பை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் கியா நிறுவனம் ஈடுபட்டது போலவும் தெரியவில்லை.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

01. போலி வாக்குறுதி

கியா செல்டோஸ் காரின் ஜிடிஎக்ஸ் டீசல் வேரியண்ட்டை புக்கிங் செய்து காத்திருக்கும் ராஜீவ் மிட்டல் என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, இரண்டு மாதங்களுக்கு முன்பு கியா செல்டோஸ் காரை முன்பதிவு செய்ததாகவும், ஆனால், எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்பது குறித்த ஒற்றை வார்த்தை பதில் கூட கியா நிறுவனத்தின் டீலரிடமிருந்து இல்லை என்று தெரிவித்துள்ளார். புக்கிங்கை ரத்து செய்யலாமா அல்லது காத்திருக்கலாமா என்று அந்த குழுமத்தில் உள்ளவர்களிடம் வினவியுள்ளார்.

இதே பதிவிற்கு பின்னூட்டம் போட்டுள்ள ஸ்மித்தேஷ் சாவன்கே என்பவர், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெலிவிரி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதம் குறித்து வரும் இதுபோன்ற புகார் கமென்ட்டுகளை அந்த பக்கத்தை நிர்வகிப்பவர்கள் உடனடியாக நீக்கி விடுவதாக தெரிவித்துள்ளார்.

இதே பிரச்னையை சந்தித்துள்ளதாக மற்றொருவரும் கமென்ட் செய்துள்ளார். டீலரில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு, சில வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து டெலிவிரி கொடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, டீலரை தினசரி தொடர்பு கொள்வது உத்தமம் என்று தெரிவித்துள்ளார்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

02. உதிரிபாகங்கள் தட்டுப்பாடு

டெல்லியை சேர்ந்த ஷைலேஷ் மீனா கோதடா என்பவர் இதுதொடர்பாக தெரிவித்துள்ள புகாரில், ஆசையாய் வாங்கி மூன்று நாட்கள் மட்டுமே ஓட்டி இருக்கிறேன். இந்த நிலையில், காரில் பின்னால் வந்த வாகனம் மோதி நசுங்கிவிட்டது. இதனை சரிசெய்வதற்கான உதிரிபாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. சர்வீஸ் மையத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மிக மோசமான அனுபவத்தை கியா செல்டோஸ் மூலமாக சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை ஆதரித்து ராகுல் என்பவரும் கமென்ட் செய்துள்ளார். தனது கார் விபத்தில் சிக்கிதையடுத்து சரி செய்வதற்காக கியா சர்வீஸ் மையத்தில் விட்டு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சரிசெய்யப்படவில்லை. உதிரிபாகங்கள் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். கியா நிறுவனத்தின் சர்வீஸ் மிக மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

03. மோசமான மைலேஜ்

கியா செல்டோஸ் காரின் டிசிடி மாடலை வைத்திருக்கும் ராஜீவ் பால் என்பவர் தனது கார் லிட்டருக்கு 7.7 கிமீ மைலேஜ் மட்டுமே தருவதாக தெரிவித்துள்ளார். ஈக்கோ மோடில் வைத்து மிக மிதமான வேகத்தில் ஓட்டிய நிலையில், இது மிக மோசமான மைலேஜ் என்று தெரிவித்துள்ளார்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

04. குறைபாடுடைய கார் டெலிவிரி

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரை சேர்ந்த அமித் தன்வர் என்பவர் தனது கியா செல்டோஸ் எச்டிகே ஆட்டோமேட்டிக் மாடல் குறித்த புகாரை பதிவு செய்துளளார். அண்மையில் தஹோத் என்ற இடத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, தனது செல்டோஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரை தானாக அணைந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். வழியில் சர்வீஸ் மையங்களில் சரிசெய்ய முயன்றும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று காரில் அடுத்தடுத்து சில பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும், கியா நிறுவனம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

05. தொழில்நுட்பக் கோளாறு

சோம்சேகர் சிங் என்பவர் தனது கியா செல்டோஸ் காரில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பெரும் தலைவலியை கொடுத்துள்ளதாகவும் அவர் மனக்குறையை தெரிவித்துள்ளார்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

06. டிசிடி கியர்பாக்ஸ் பிரச்னை

மெஹூல் ரஸ்டோகி என்பவர் சில வாரங்களுக்கு முன்புதான் கியா செல்டோஸ் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் டிசிடி கியர்பாக்ஸ் மாடலை வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கார் போக்குவரத்து நெரிசலில் வைத்து ஓட்டும்போது கியர்பாக்ஸ் அதிக சூடாவதாக தெரிவித்துள்ளார். இதே பிரச்னையை எல்லோரும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

07. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும் பிரச்னை

கியா செல்டோஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரையின் இயக்கம் அடிக்கடி ஸ்தம்பித்து நிற்பதாக தெரிவித்தள்ளார். இதே பிரச்னை பல கார்களில் உள்ளதாக தனது கியா செல்டோஸ் காரின் பிரச்னை குறித்து பிரதீப் கைய்ரே என்பவர் தெரிவித்துள்ளார். சிறிய பள்ளம், மேடுகளில் கார் செல்லும்போது இந்த பிரச்னை எழுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.

செல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா?... கியா மீது குவியும் புகார்கள்!

கியா நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதைவிட, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதே எதிர்கால வர்த்தகத்திற்கு வலு சேர்க்கும் என்று வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Via- Gaadiwaadi

Most Read Articles
English summary
KIA Seltos owners have complained some serious reliability and quality issues with their SUVs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X