கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

அப்டேட்: செல்டோஸ் காரின் உற்பத்தி துவங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கியா மோட்டார்ஸ் சற்றுமுன் எமக்கு அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. செல்டோஸ் என்ற முதல் எஸ்யூவி ரக மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

அடுத்த மாதம் 22ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவும் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடுமுழுவதும் உள்்ள 206 விற்பனை மையங்களில் கியா செல்டோஸ் காருக்கு ரூ.25,000 முன்பணத்துடன் முன்பதிவு நடக்கிறது.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

முதல் நாளிலேயே 6,046 பேர் முன்பதிவு செய்த நிலையில், தொடர்ந்து மிக கணிசமான முன்பதிவு எண்ணிக்கையுடன் களத்தில் இறங்குகிறது கியா செல்டோஸ் கார்.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

இந்த நிலையில், வரும் 31ந் தேதி முதல் கியா செல்டோஸ் காரின் உற்பத்தி ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைக்கப்பட்டுள்ள கியா கார் தொழிற்சாலையில் துவங்கப்பட இருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே சோதனை முறையிலான உற்பத்தி துவங்கப்பட்டு நடந்து வந்தாலும், விற்பனைக்காக செல்லும் கியா செல்டோஸ் கார்களின் உற்பத்தி 31ந் தேதி முதல் துவங்குகிறது.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

புதிய கியா செல்டோஸ் காரின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அத்துடன்,, எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட இருக்கிறது. நேரடி இணைய வசதியுடன் யுவோ என்ற செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளையும், தகவல்களை பெறுவதற்கான வழிமுறைகளும் உள்ளன. 7.0 அங்குல எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

இந்த கார் டெக் லைன் என்ற மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளிலும், ஜிடி லைன் என்ற மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. இந்த எஞ்சின் தேர்வுகள் அனைத்துமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

கியா செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் 16.4 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 16.3 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் மேனுவல் மாடல் 20.8 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 17.8 கிமீ மைலேஜையும் வழங்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் 16.1 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் 16.2 கிமீ மைலேஜையும் வழங்கும்.

கியா செல்டோஸ் காரின் உற்பத்தி விரைவில் துவங்குகிறது!

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர், ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 26, 2019, 16:45 [IST]
English summary
Kia Seltos series production in India to commence soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+