நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் நீங்க அசந்து போயிருவீங்க.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

இந்திய மார்க்கெட்டில் நடப்பு 2019ம் ஆண்டில், மிகப்பெரிய ஹிட் அடித்த கார் எதுவென்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி கியா செல்டோஸ் எஸ்யூவிதான் என அடித்து சொல்லலாம். வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கியா செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

அறிமுகம் செய்யப்பட்ட முதல் 4 மாதங்களுக்குள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்டோஸ் கார்களை விற்பனை செய்து கியா நிறுவனம் பிரம்மிக்க வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தை மட்டும் எடுத்து கொண்டால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக கியா செல்டோஸ் உருவெடுத்தது.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

விலை குறைவான சில மாடல்கள் கூட விற்பனை எண்ணிக்கையில் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு அருகே கூட வர முடியவில்லை. அந்த கார்களையும் வீழ்த்தியுள்ளது கியா செல்டோஸ். இந்திய மார்க்கெட்டில் கியா செல்டோஸின் ஆதிக்கம் இன்னும் சில மாதங்களுக்கு முழுமையாக தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது ப்ரெஷ் ஆன கார்.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

மேலும் சிறப்பாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அட்டகாசமான வசதிகளையும் கியா செல்டோஸ் எஸ்யூவி பெற்றுள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவியின் விலை 9.69 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் மூலம் ஹூண்டாய் கிரெட்டாவை விட சற்றே விலை குறைவான மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

ஹூண்டாய் கிரெட்டா காரின் பேஸ் டிரிம்மின் விலை 10 லட்ச ரூபாய். இந்தியாவில் மூன்று இன்ஜின் மற்றும் 4 கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து இன்ஜின்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானவை. இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் 2020 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது மந்தநிலை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் காரணமாக பெரும்பாலான முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலிலும் கூட புது வரவான கியா செல்டோஸ் விற்பனையில் அசத்துவது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் தொழிற்சாலையில் செல்டோஸ் எஸ்யூவி கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கியா நிறுவனம் வெகு விரைவில் மேலும் இரண்டு புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...

இதில், முதலாவது கார் கியா கார்னிவல் லக்ஸரி எம்பிவி. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கியா கார்னிவல் கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார் 2020ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்டோஸ் எஸ்யூவி கார் மூலம் கியா மோட்டார் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளதால், இவ்விரு புதிய கார்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2019, 9:30 [IST]
English summary
Kia Seltos SUV Sales Cross 40,000 Units. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+