இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது: நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்

இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் கியா நிறுவனத்தின் செல்டோஸ் காருக்கான புக்கிங் நேற்று (செவ்வாய்) முதல் தொடங்கி இருக்கின்றது. இந்த கார் மிக விரைவில் களமிறங்க உள்ளநிலையில், அதில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள்குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை, இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

தென் கொரியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவிற்கான முதல் மாடல் காரை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, அந்நிறுவனம் வருகின்ற ஆகஸ்டு மாதம் 22ம் தேதி, அந்த காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்ற மாடலாக களமிறங்கும் இந்த காருக்கு, க்ரீக் நாட்டின் கடவுளுடைய 'செல்டஸ்' (Celtus) என்ற பெயரைத் தழுவி, 'செல்டோஸ்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த கார் இந்தியர்களைக் கவர பிரிமியம் ரக எஸ்யூவி ரகத்தில் களமிறங்க இருக்கின்றது. இது, இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டார், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கின்றது.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

இந்நிலையில், இந்த காருக்கான புக்கிங் நேற்று (செவ்வாய்) முதல் தொடங்கியுள்ளது. இந்த கார் இந்தியர்கள் மத்தியில் நீண்ட நாள் ஆவலாக இருந்து வந்தநிலையில், அவர்களின் கனா விரைவில் நனவாக இருக்கின்றது.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

இந்தகாரை, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிகளிலும் புக் செய்து கொள்ளமுடியும். ஆன்லைனில் புக் செய்ய அதிகாரப்பூர்வ பக்கமான http://www.kia.com/in/buy/book-online.html சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று, கியா நிறுவனத்தின் டீலர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் செல்டோஸ் காரினை புக் செய்துகொள்ளலாம்.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதற்கு முன் தொகையாக ரூ. 25 ஆயிரம் பெறப்படுகின்றது. கியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் எளிதில் அவர்களை நாடும் வகையில், 206 விற்பனை மையங்களை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. இந்த மையங்கள் மூலமே தற்போது செல்டோஸ் கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அதேசமயம், விரைவில் இந்த விற்பனை அதிகரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படகின்றது.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

இந்தியாவிற்கான முதல் மாடலாக களமிறங்கும் இந்த செல்டோஸ் கார், இந்தியர்களின் பயன்பாட்டை மனதில் கொண்டு தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு, அதில் இடம்பெற்றிருக்கும் பல அம்சங்கள் இந்தியர்களுக்கு ஏற்பவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

இதுகுறித்து, கியா மோட்டார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவருமான மனோகர் பட் கூறியதாவது, "செல்டோஸின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் எங்கள் குழுவினரின் கடின உழைப்பு இருப்பதைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம். இந்த காரை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும்விதமாக நாட்டின் 160 முக்கிய நகரங்களில் 265 டச் பாயிண்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகையால், இந்த கார் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் நாங்கள் நம்புகின்றோம்" என்றார்.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

கியா செல்டோஸ் காரில் பல சிறப்பம்சங்கள் காணப்பட்டாலும், அவையனைத்திலும் மிக முக்கியமானதாக யுவிஓ கனெக்ட் சிஸ்டம் இருக்கின்றது. இந்த அம்சம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, இந்த யுவிஓ கனெக்ட் மூலம் 37 வகையிலான சேவையைப் பெற முடியும். அவை என்னென்ன என்பதை கீழே காணலாம்.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

நேவிகேஷனை மையமாகக் கொண்டு 8 சேவைகள் வழங்கப்பட்டுகின்றன.

அவை:

நேரடி கார் கண்காணிப்பு - Live car tracking

கார் இருப்பிட பகிர்வு - Car location sharing

இலக்கு பகிர்வு - Destination sharing from the car

நேரடி போக்குவரத்து தகவல் - Live traffic information

சேரும் இடத்தை அட்டவணை செய்தல் - Destination set with schedule

காரை கண்டுபிடி - Find my car

விரும்பிய இலக்கை தேடுதல் - Desired destination search

இலக்கை காருக்கு அனுப்புதல் - Send destination route to the cars

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

பாதுகாப்பு அம்சங்கள்:

மோதல் அறிவிப்பு - Auto Collison Notification

SOS- அவசர உதவி - SOS-Emergency assistance

பீதி அறிவிப்பு - Panic notification

சாலை பக்க உதவி - Road side assistance

வாகன திருட்டு அறிவிப்பு - Stolen vehicle notification

திருடப்பட்ட வாகனத்தை கண்கானித்தல் - Stolen vehicle tracking

திருடப்பட்ட வாகன அசையாமல் செய்தல் - Stolen vehicle immobilization

பாதுகாப்பு எச்சரிக்கை - Safety alert (Geo fence, TimeFence, Speed, Valet, Idle)

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

வாகனத்தை கையாளுதல்:

காரின் நிலைப்பாடு குறித்த அறிக்கை - Vehicle health report

நிலைப்பாடினை தானாக கண்டறிந்து எச்சரிக்கை செய்தல் - Auto diagnostic alert

மேனுவல் டையக்னஸ்டிக் எச்சரிக்கை - Manual diagnostic alert

பராமரிப்பு எச்சரிக்கை - Maintenance alert

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

ரிமோட் கன்ட்ரோல்:

ரிமோட் மூலம் எஞ்ஜின் ஆன் / ஆஃப் செய்தல் - Remote Engine Start/Stop

ஏசியை கன்ட்ரோல் - Remote AC Control

காற்றை தூய்மைப்படுத்தலாம் - Remote Smart Pure Air ON

கதவு பூட்டுதல் / திறத்தல் - Remote Door Lock /Unlock

ஹார்ன் மற்றும் லைட் - Remote Horn & Light

காரின் நிலை அறிதல் - Remote vehicle status

டிபிஎம்எஸ் நிலை - TPMS status

எரிபொருள் அளவுகுறித்த தகவல் - Fuel level information

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

முக்கிய வசதிகள்:

செயற்கை நுண்ணறிவு கொண்ட குரல் கட்டளை - AI Voice command

கார் காற்றின் தரம் கண்காணித்தல் - Smart Pure Air (In Car Air Quality Monitoring)

கால் சென்டர் உதவியை நாடுதல் - Call centre assisted navigation

பயணத் தகவல் / ஓட்டுநர் நடத்தை - Trip Info/ Driving Behaviour

ஷேர் மை ஆப் - Share My App

உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் இடம்பெற இருக்கின்றது.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

இதுமட்டுமின்றி, கூடுதலாக பல்வேறு சொகுசு வசதிகளும் செல்டோஸ் காரில் இடம்பெற இருக்கின்றது. அந்தவகையில், ஹீடட் ஓஆர்விஎம்கள், வென்டிலேடிங் திறன் கொண்ட இருக்கைகள், சன்ரூஃப், பெரியளவிலான நேவிகேஷன் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் மியூஸிக் சிஸ்டம் மற்றும் மியூசிக் ஏற்பவாறு எரியக்கூடிய மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிமியம் வசதிகள் இந்த காரில் இடம்பெறுகின்றன.

இந்தியர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கின்றது... நவீனத்தின் மறு உருவமாக களமிறங்கும் கியா செல்டோஸ்...!

கியா செல்டோஸ் கார், 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜெட் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த கார் சிங்கிள் மற்றும் ட்யூவல் டோன் ஆப்ஷனிலும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ரூ. 11-17 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles

English summary
Kia Seltos UVO Connect 37 Features Detailed. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more