கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு நேற்றுமுன்தினம் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. முதல் நாளே 6,046 முன்பதிவுகளை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்த கார் குறித்த பல முக்கியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இவை வசதிகளை பொறுத்து அதிகபட்சமாக 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஜிடி லைன் மாடலானது அதிக சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன்மிக்க மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

மேலும், இந்த கார் இரண்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. இந்த எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகளும், வேரியண்ட்டுகளும் எவ்வாறு வழங்கப்பட இருக்கின்றன என்ற விபரம் வெளியாகி இருக்கிறது. இது நிச்சயம் முன்பதிவு செய்ய காத்திருப்போருக்கு உதவும் என்ற நிலையில் பகிர்ந்து கொள்கிறோம்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

கியா செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் டெக் லைனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

Variant

GT Line

Tech Line

Engine

1.4-litre Turbocharged Petrol

1.5-litre Petrol

1.5-litre Diesel

Power

140PS

115PS

115PS

Torque

242Nm

114Nm

250Nm

Transmission

6-speed MT/7-speed DCT

6-speed MT/CVT

6-speed MT/6-speed AT

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

டீசல் எஞ்சின் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்பட இருக்கின்றன. அதேவேளை, ஜிடி லைன் வேரியண்ட்டானது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்ற தெரிவிக்கப்படுகிறது. இந்த எஞ்சினும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

கியா செல்டோஸ் எஸ்யூவியின் மூன்று எஞ்சின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இதன் ரகத்திலான சந்தையில் பிஎஸ்-6 எஞ்சின்களை பெற்றிருக்கும் முதல் மாடலாகவும் பெருமை பெறுகிறது.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

டெக் லைன் மற்றும் ஜிடி லைன் வேரியண்ட்டுகளில் அதிக சிறப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7.0 அங்குல எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர் ஆகியவை கொடுக்கப்படும்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இ-சிம்கார்டு பொருத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக நேரடி இணைய வசதியை இந்த கார் பெறுகிறது. இதற்கான யுவோ என்ற விசேஷ மொபைல்போன் செயலி மூலமாக ஏராளமான வசதிகளை பெற முடியும். ரிமோட் முறையில் கார் எஞ்சின், ஏசி, கதவுகள், ஜன்னல் கண்ணாடிகளை இயக்கும் வசதிகளையும், நேவிகேஷன் வசதியையும் பெற முடியும்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ்ஸ பிரிமீயம் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட இருக்கிறது. அத்துடன், 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே திரையும் கொடுக்கப்பட இருக்கிறது. ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும், காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பமும் இந்த காரின் பிரிமீயம் அம்சமாக கூறலாம்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

இந்த காரில் 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா? - இதையும் படிச்சுட்டு போங்க!

புதிய கியா செல்டோஸ் கார் ஆகஸ்ட் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Cardekho

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2019, 14:50 [IST]
English summary
Kia Seltos SUV's variant-wise engine details have revealed for India spec model. Here are complete details in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+