கியா செல்டோஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம் கசிந்தது!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் என்ற எஸ்யூவி காருடன் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க உள்ளது. அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் எஎஸ்யூவி கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கியா செல்டோஸ் கார் டிசைன், வசதிகளில் சிறப்பாக இருக்கும் என்பதுடன், விலை மற்றும் வசதிகள் குறித்த விபரங்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் நிலவுகிறது. இந்த நிலையில், காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய வசதிகள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

கியா செல்டோஸ் கார் TE, TK, TK+, TX மற்றும் TX+ ஆகிய ஐந்து வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில், பேஸ் வேரியண்ட்டிலேயே ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. டீசல் வேரியண்ட்டுகளானது GTK, GTX மற்றும் GTX+ ஆகிய குறியீட்டுப் பெயர்களில் வர இருக்கிறது.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக பல்வேறு வசதிகளை அளிக்கும் யுவோ என்ற இணைய தொழில்நுட்ப வசதிகளை பெறும் வாய்ப்பு TX மற்றும் TX+ ஆகிய டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது.
பேஸ் வேரியண்ட்டில் வாய்ஸ் ரெககனிஷன், புளுடூத் கனெக்ட்டிவிட்டி, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் ஆகியவை நிரந்தர அம்சமாக இடம்பெற்ற இருக்கின்றன. TK வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்மார்ட் புஷ் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் ஃபோல்டபிள் சைடு மிரர்கள் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.

விலை உயர்ந்த TX வேரியண்ட்டில் யுவோ கனெக்டெட் கார் அப்ளிகேஷன், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட்டுகள், சாய்மான வசதியுடன் பின் இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், யுஎஸ்பி ஃபாஸ்ட் சார்ஜர், 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் விலை உயர்ந்த TX+ என்ற டாப் வேரியண்ட்டில் சோலார் யுவி கண்ணாடிகள், ரியர் வியூ மானிட்டர், 360 டிகிரி கேமரா, 7 அங்குல எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் டிரைவர் இறுக்கை, வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளன.

தவிரவும், இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், மல்டி டிரைவிங் மோடுகள், பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

கியா செல்டோஸ் எஸ்யூவி காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளும், நான்குவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றன. இந்த காரில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது.

இந்த காரில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான தேர்வுகளை வழங்கும் வாய்ப்பாக இருக்கும்.

புதிய கியா செல்டோஸ் கார் வரும் ஆகஸ்ட் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலைப்பட்டியலில் இந்த புதிய எஸ்யூவி கார் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
Source: Car News By Rishabh Arora


Click it and Unblock the Notifications








