கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய கியா எஸ்பி எஸ்யூவியின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது முதல் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல்தான் முதலாவதாக வர இருக்கிறது.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

கியா ட்ரெயில்ஸ்டெர் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி மாடலை கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் டிசைன் இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த எஸ்யூவியின் வருகையை பலரும் ஆர்வமாக பார்த்து காத்திருக்கின்றனர்.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

இந்த நிலையில், அடுத்த மாதம் 20ந் தேதி புதிய கியா ட்ரெயில்ஸ்டெர் எஸ்யூவியானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

புலி மூக்கு போன்ற க்ரில் அமைப்பு, கச்சிதமான எல்இடி ஹெட்லைட்டுடகள், பிரத்யேக வண்ணக் கூரை, எல்இடி பனி விளக்குகள், ரியர் டிஃபியூசர் உளளிட்ட பல அம்சங்களை இந்த எஸ்யூவியில் எதிர்பார்க்கலாம்.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

இந்த எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், வைஃபை வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன் லைட்டிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வர இருக்கிறது.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தேர்வுகளில வருகிறது.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

இதுதவிர்த்து, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை அளிக்கும். இதில், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.

கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது!

புதிய கியா ட்ரெயில்ஸ்டெர் எஸ்யூவியானது ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர், டாடா ஹாரியர் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

English summary
The Kia SP SUV has attracted a lot of attention since it was showcased at the 2018 Auto Expo. It could be retailed as the Kia Trailster in India and has been seen during tests very often. According to AutoCar India, sources have confirmed that the vehicle will be unveiled in India on 20 June 2019.
Story first published: Wednesday, May 8, 2019, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more