கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

கியா நிறுவனத்தின் முதல் கார் உற்பத்தி துவங்கும் தேதி குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விழாவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அண்மையில் முதல் கார் மாடலாக செல்டோஸ் என்ற எஸ்யூவியையும் இந்தியர்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தியது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் பெனுகொண்டா என்ற இடத்தில் 536 ஏக்கர் பரப்பளவில் கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இங்கு சோதனை முறையில் கார் உற்த்தி பணிகள் நடந்து வருகிறது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

இந்த நிலையில், செல்டோஸ் காரின் உற்பத்தி வரும் 31ந் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தள்ளிபோடப்பட்டது. வரும் ஆகஸ்ட் 8ந் தேதி கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் காரின் உற்பத்தியை துவங்க இருப்பதாக தெரிகிறது. இதற்காகவே, ஆந்திர முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், விலை விபரம் ஆகஸ்ட் 22ந் தேதி வெளியிடப்படும் என்று ஆட்டோமொபைல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

ஆந்திர முதல்வர் அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, கியா நிறுவனத்தின் முதல் 'மேட் இன் இந்தியா' கார் ஆகஸ்ட் 8ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிமுக விழாவில் பங்கேற்பதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்தியர்களின் ஆவலைத் தூண்டியுள்ள கியா செல்டோஸ் காருக்கு ஏற்கனவே முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுவிட்டது. நாடுமுழுவதும் உள்ள 206 விற்பனை மையங்களில் ரூ.25,000 முன்பணத்துடன் இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது. முன்பதிவு எண்ணிக்கையும் கணிசமாக இருப்பதால், செல்டோஸ் காரை விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் கியா மோட்டார் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

கியா செல்டோஸ் கார் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உணிழ்வு தரத்திற்கு இணையான தரத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று எஞ்சின்களுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடி இன்டர்நெட் இணைப்பு வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்பு வசதிகளிலும் நிறைவான மாடலாக வருகிறது.

கியா நிறுவனத்தின் முதல் கார் அறிமுக விழா: ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு அழைப்பு!

ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம இடையிலான விலை ரதத்தில் இந்த புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2019, 12:02 [IST]
English summary
South Korean car maker, Kia Motors will launch its first 'Made in India' car on August 8, according to the Andhra Pradesh Chief Ministers Office.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+