செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

கியா நிறுவனம், அதன் செல்டோஸ் எஸ்யூவி ரக கார் குறித்த இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளது.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

ஹூண்டாய் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் கியா, அதன் தயாரிப்புகளை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் இந்த நிறுவனம், கால் தடம் பதிப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால், இந்த நிறுவனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கொடிகட்டி பறந்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

கியா நிறுவனம், அண்மைக் காலங்களாக எஸ்பி2ஐ என்ற பெயரில் எஸ்யூவி ரக காரை, இந்தியச் சாலைகளில் வைத்து பரிசோதனக்கு உட்படுத்தி வந்தது. இந்த நிலையில், இந்த மாடலுக்கு செல்டோஸ் என பெயர் வைக்கப்பட்டது. இதைத்தான் தற்போது, இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் முதல் மாடலாக களமிறக்க இருக்கின்றது.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

முன்னதாக, சாலை பரிசோதனையின்போது, மறைக்கப்பட்ட ஸ்டிக்கர்களாலும், கவர்களாலும் காட்சியளித்த வந்த இந்த கார், தற்போது டீசர் வாயிலாக காட்சியளிக்க துவங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்டோஸ் குறித்த முதல் டீசர் வெளியாகியது. அதில், காரின் முன்பக்க ஹெட்லைட், க்ரில் அமைப்பு, பின் டெயில் லைட், வீல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

கியாவின், இந்த செல்டோஸ் எஸ்யூவி ரக கார், எதிர்கால டிசைனைக் கொண்டதாக உருவாகி வருவதாக கூறப்படுகின்றது. அதனை உறுதிச் செய்யும் வகையில், இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கேற்ப வகையில், செல்டோஸின் ஹெட்லைட், க்ரில், ரியர் லைட், வீல்களின் வடிவம் எதிர்கால டிசைனைப் பெற்றதாக இருந்தன.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

இந்நிலையில், கியா நிறுவனம், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. செல்டோஸின் இந்த இரண்டாவது டீசர் தெறிக்கவிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த டீசரிலும் எஸ்யூவி காரின் முழு தோற்றம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது வேதனையளிக்கும் விதமாக இருக்கின்றது. இருப்பினும், டீசரில் இடம்பெற்றிருந்த காட்சிகள் செல்டோஸ் மீது மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவைக் கீழே காணலாம்.

கியா நிறுவனம் இந்த புதிய எஸ்யூவி ரக காரை வருகின்ற செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னதாக உலகளாவிய வெளியீடாக வருகின்ற 20ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

அதேசமயம், இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஹூண்டாய் வெனியூ காரில் இடம்பெற்றிருக்கும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டியைப் போன்ற, இன்டர்நெட் வசதி இந்த காருக்கும் கொடுக்கப்பட உள்ளது. இதற்காக இன்டர்நெட் வசதியுடைய பிரத்யேக இ-சிம்கள் வழங்கப்பட உள்ளன. இது, ஸ்மார்ட்போன் வழியாக, உங்களை காருடன் 24*7 தொடர்பினிலேயே வைத்திருக்க உதவும்.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

மேலும், புதிய கியா செல்டோஸ் காரில், தற்போதைய நவீன யுகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. அவ்வாறு, டெலிமேட்டிக் சேவையுடன் கூடிய யூவிஓ கன்னெக்ட் சிஸ்டம் மற்றும் ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யக்கூடிய ஏசி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட உள்ளன.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

இத்துடன், பாதுகாப்பு மற்றும் நவீன வசதியாக, இபிடியுடன் கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), மல்டிபிள் ஏர் பேக்ஸ், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரிக் பார்க் பிரேக், க்ராஷ் நோடிஃபிகேஷன், நேரடியான கார் ட்ராக்கிங், திருட்டு அலர்ட் உள்ளிட்ட வசதிகளும் இதில் இணைக்கப்பட உள்ளன.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

மேலும், டச் ஸ்கிரீன் சிஸ்டம், 10.25 இன்சிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் 7 இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேக்கள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளன. இவற்றுடன், இந்த நடுத்தர அளவு கொண்ட எஸ்யூவி காரில் 5 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதி நிறுவப்பட உள்ளது. இந்த இருக்கையானது ஃபாக்ஸ் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

செல்டோஸ் மாடலின் தெறிக்கவிடும் டீசரை வெளியிட்ட கியா: வீடியோ உள்ளே...

கியா செல்டோஸ் எஸ்யூவி கார் பிஎஸ்6 தரத்திற்கேற்ப 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்க இருக்கின்றது. மேலும், இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், செல்டோஸ் மாடலில் ஹைபிரிட் வெர்ஷனையும் கியா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 14, 2019, 11:56 [IST]
English summary
Kia Unveils Second Teaser Video For Seltos. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+