கைனெட்டிக் சஃபர் ஸ்டார் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்!

கைனெட்டிக் சஃபர் ஸ்டார் என்ற பெயரில் புதிய மூன்று சக்கர மின்சார லோடு ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கைனெட்டிக் க்ரீன் எனெர்ஜி நிறுவனம் பேட்டரியில் இயங்கும் இந்த புதிய பாரம் ஏற்றும் வசதியுடன் கூடிய இந்த லோடு ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார வாகனம் முழுவதும் ஸ்டீல் பாடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறுகலான, நெரிசல் மிகுந்த நகர்ப்புற பகுதிகளில் சிறந்த போக்குவரத்து சாதனமாக இது பயன்படும். இந்த வாகனமானது 400 கிலோ எடை சுமக்கும் திறனை பெற்றிருக்கிறது.

கைனெட்டிக் சஃபர் ஸ்டார் எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்!

புதிய கைனெட்டிக் சஃபர் ஸ்டார் மின்சார வாகனத்தில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. வியாபார நிறுவனங்கள், உணவுப்பொருள் டெலிவிரி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு இது சிறந்த பயன்பாட்டை அளிக்கும்.

இந்த வாகனத்தில் இருக்கும் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, நகர்ப்புறத்தில் கடைசி கட்ட போக்குவரத்து தீர்வுகளை இந்த வாகனம் வழங்கும் என்று கைனெட்டிக் தெரிவிக்கிறது.

இதே ரகத்திலான டீசல் வாகனங்கள் ஒரு கிமீ செல்வதற்கு ரூ.3 வரை செலவாகும் நிலையில், இந்த வாகனம் வெறும் 50 பைசாவில் அதனை வழங்கும் என்று கைனெட்டிக் தெரிவித்துள்ளது. மேலும், சப்தமில்லாத, புகையில்லாத சூழலை உருவாக்கும் வாய்ப்பையும் வழங்கும்.

இந்த வாகனத்தில் 48V லித்தியம் அயான் பேட்டரியும், 150AH மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வாகனத்தில் 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேட்டரி மற்றும் வாகனத்திற்கு 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

புதிய கைனெட்டிக் சஃபர் ஸ்டார் வாகனத்திற்கு ரூ.2.20 லட்சம் புனே எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் இதற்கு மானியம் பெறும் தகுதியுடைய வாகனமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Kinetic Green Energy has launched a new electric three-wheeler in the Indian market, the Safar Star. The new Kinetic Safar Star electric three-wheeler is offered with a price tag of Rs 2.20 lakh, ex-showroom (Pune) and will be part of the mid-speed electric vehicle segment.
Story first published: Saturday, October 12, 2019, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X