புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த புதிய மாடலை லம்போர்கினி அறிமுகம் செய்தது. லம்போர்கினி அவென்டேடார் காரின் விசேஷ மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் உலக அளவ

விலை உயர்ந்த லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே சூப்பர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியிலிருந்து எமது செய்திக் குழுவினர் தரும் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெபுள் பீச் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த புதிய மாடலை லம்போர்கினி அறிமுகம் செய்தது. லம்போர்கினி அவென்டேடார் காரின் விசேஷ மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் உலக அளவில் மொத்தமாக 600 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

லம்போர்கினி அவென்டேடார் எஸ் மற்றும் எஸ்வி ஆகிய மாடல்களின் டிசைன் தாத்பரியங்களுடன் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் உயர்ரக மாடலாக உருவாக்கப்ப்டடு இருக்கிறது. கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய பாகங்களுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக் எனப்படும் காற்றை கிழித்துச் செல்லும் தத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காரின் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு நுட்பத்திற்காக லம்போர்கினி நிறுவனம் காப்புரிமையையும் பெற்றிருக்கிறது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஏரோடைனமிக்ஸை அதிகரிக்கும் வகையில், இந்த காரின் பானட்டில் கூடுதல் ஏர் வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, பெரிய ஸ்பிளிட்டர் அமைப்பு முன்புறத்தில் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு வளைவான தாங்கி அமைப்பின் மீது பின்புற விங் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் செயல்திறனில் மிரட்டும் அளவுக்கு தோற்றத்திலும் பல விசேஷ அம்சங்களை பெற்றிருக்கிறது. மிரட்டலான முகப்பு அமைப்பு மற்றும் ஆக்சஸெரீகள் உள்ளன. பக்கவாட்டில் முத்தாப்ப்பாக காட்சி தரும் அலாய் வீல்கள், சிசர் டோர் கதவுகள் அமைப்பு மற்றும் பின்புறத்தில் இரட்டை குழல் புகைப்போக்கி அமைப்பும் இதன் முக்கிய சிறப்புகளாக இருக்கின்றன.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே மாடலில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் அதிகபட்சமாக 770 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அவென்டேடார் எஸ்வி மாடலைவிட 20 பிஎச்பி கூடுதல் பவரை அளிக்கும் விதத்தில் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே சூப்பர் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை 8.6 வினாடிகளிலும் தொட்டுவிடும் வல்லமை வாய்ந்தது. இந்த கார் அதிகபட்சமாக 349 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த அதிசக்திவாய்ந்த புதிய லம்போர்கினி அவேன்டேடார் எஸ்விஜே கார் 1,525 கிலோ மட்டுமே எடை கொண்டது. மிகச் சிறப்பான எடைக்கும், பவரை வெளிப்படுத்தும் திறனுக்ககுமான விகிதாச்சாரத்தையும் பெற்ற மாடல். அதிசக்திவாய்ந்த சூப்பர் காரை விரும்புவோருக்கு சிறந்த மாடலாக இருக்கும்.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் ரூ.8.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று லம்போர்கினி இந்தியா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிச்சயம் இந்திய சூப்பர் கார் விரும்பிகளை கவர்ந்திழுப்பதோடு, தனித்துவமான மாடலாகவும் இருக்கும்.

புதிய லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே கார் விற்பனைக்கு அறிமுகம்!

தயாரிப்பு நிலை கார்களில் நர்பர்க்ரிங் பந்தய களத்தை 6:44.97 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தது. இந்தியாவின் முதல் லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே காரை பூபேஷ் ரெட்டி வாங்கி இருக்கிறார். லம்போர்கினி அவென்டேடார் எஸ்விஜே காருக்கு நேர் போட்டியாக கருதப்படும் போர்ஷே ஜிடி2 ஆர்எஸ் கார் மாடலையும் இவர் வைத்திருக்கிறார்.

Most Read Articles
English summary
Lamborghini Aventador SVJ Super Car Launched In India.
Story first published: Monday, January 21, 2019, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X