பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. காரணம் என்ன தெரியுமா?

ஒரே நேரத்தில் மூன்று புத்தம் புதிய லம்போர்கினி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அதிர்ச்சியான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

பல முன்னணி நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் அண்மைக் காலங்களாக விலையுயர்ந்த கார்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. அதிலும் சமீபகாலமாக வெளிநாட்டு வாகனங்களின் அளவு மிக வேகமாக வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதனை நம் நாட்டின் முக்கிய நகரங்களின் சாலைகளில் ஒரு முறை பயணித்தாலே நமக்கு தெரிந்துவிடும்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று புதிய வாகனங்களை வாங்கும் இந்தியர்களின் மனநிலை குறித்த ஓர் ஆய்வினனை மேற்கொண்டது. அதில், பெரும்பாலான நபர்கள் வாகனத்தை வாங்கும்போது விலையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதை என்றும், மாறாக புதிதாக வாங்கப்படும் கார் அல்லது பைக் போன்ற வாகனங்கள் மிகவும் ஸ்டைலிஸாக இருப்பதையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

அதுமட்டுமின்றி, அந்த வாகனத்தில் அனைத்து விதமான சொகுசு வசதிகளையும் இருப்பதையே இந்தியர்கள் விரும்புவதாக அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

அதற்கேற்ப இந்தியாவில் உள்ள சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிலும், ஃபெர்ராரி, பென்ட்லீ, லம்போர்கினி உள்ளிட்ட நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்கள் சமீப காலமாக நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றன.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

அந்தவகையில், லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மற்றும் ஹூராகேன் போன்ற சொகுசு கார்கள் இந்திய வாகன சந்தையில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. லம்போர்கினி உருஸ் கார் இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி கார்களிலேயே அதீத திறன் கொண்ட எஸ்யூவி ரக காராக காட்சியளிக்கின்றது. இந்த மாடலின் புத்தம் புதிய காரைதான் கர்நாடக மாநில போலீஸார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

அண்மைக் காலங்களாக விலையுயர்ந்த கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக போலீஸார், அதுபோன்ற கார்கள்மீது தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலம் அட்டிபெல்லா என்ற பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவ்வழியாக வந்த விலையுயர்ந்த மூன்று புத்தம் புதிய லம்போர்கினி கார்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

இதில், எந்தவொரு கார்களும் சாலை வரி மற்றும் பதிவெண் ஆகியவை இல்லாமல் இயக்கி வந்தது தெரியவந்துள்ளது. அதேசமயம், அந்த கார்களில் தற்காலிக பதிவெண்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், கார்கள் அனைத்தும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஹோயாலா டீலர்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் சாலை வரி செலுத்தாமல் கார்கள் இயக்கி வந்ததன் காரணமாக, மூன்று புத்தம் புதிய கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்து ஆர்டிஓ-விடம் ஒப்படைத்துள்ளனர்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

இந்த கார்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டு விட்டதாக அல்லது ஓர் டீலரிடம் மற்றுமொரு டீலருக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவையனைத்தும் பயன்பாட்டிற்கு வராத புத்தம் புதிய கார்கள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. எனவே, ஒரு லம்போர்கினி ஹூராகேன் மற்றும் இரு உருஸ் எஸ்யூவி கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களின் அடிப்படையில், அனைத்து வாகனங்களும் பெங்களூரு முதல் ஊட்டி வரையிலான லம்போர்கினி கிரோ (GIRO) டிரைவ் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக புறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள லம்போர்கினி வாகனங்களின் உரிமையாளர்கள் இணைந்து பங்கேற்கும் ஓர் நிகழ்ச்சியாகும்.

பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்... காரணம் என்ன தெரியுமா..?

இதுகுறித்த பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் உலா வந்தம் உள்ளன. அதில், லம்போர்கினி நிறுவனத்தின் பல்வேறு மாடல்கள் அணி வகுத்துச் செல்வதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

தற்போது, ஆர்டிஓ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மூன்று லம்போர்கினி கார்களும் ரூ. 12 கோடி மதிப்பிலானவை. இவற்றிற்கான சாலை வரி செலுத்திய பின்னர் டீலர்களிடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இதுபோன்ற விலையுயர்ந்த கார்கள் சாலை வரி செலுத்தாமல் பறிமுதல் செய்யப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக இதுபோல பல்வேறு சம்பவங்கள் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் அரங்கேறியுள்ளன. ஆனால், கர்நாடகாவில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவமே மிகப் பெரிய சம்பவமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால், ஒரே நேரத்தில் சாலை வரி இல்லாத மூன்று கார்களை பறிமுதல் செய்வது இதுவே முதல் முறையாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Huracan & 2 Urus SUVs Seized By Cops. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X