லம்போ ஹூராகென் எவோ ஸ்பைடர் சூப்பர் கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லம்போர்கினி ஹூராகென் காரின் கன்வெர்ட்டிபிள் ரக மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த ஆண்டு இறுதியில் உலகளாவிய அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லம்போர்கினி ஹூராகென் எவோ என்ற பெயரிலான இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3.73 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த நிலையில், லம்போர்கினி ஹூராகென் எவோ காரின் திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் எனறு அழைக்கப்படும் இந்த மாடலானது வரும் 10ந் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

அன்று முதல் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் ரக மாடலுக்கான முன்பதிவும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் வடிவமைப்பு, வசதிகள் மற்றும் செயல்திறனில் மிகச் சிறந்த சூப்பர் கார் மாடலாக நிலைநிறுத்துகிறது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த திறந்து மூடும் கூரை அமைப்புடைய மாடலின் முக்கிய சிறப்பாக, வெறும் 17 வினாடிகளில் கூரையானது எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் முறையில் மடக்கும் வசதிகொண்டது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு கவரும் விஷயமாக இருக்கும்.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஏரோடைனமிக்ஸை அதிகரிக்கும் விதத்தில், ரியர் டிஃபியூசர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டைக் குழல் சைலன்சர்களும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த காரின் இன்டீரியரும் மிகவும் கவர்ச்சிகரமாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியதாகவும் தெரிகிறது. கார்பன் பாகங்கள், அல்கான்ட்ரா லெதர் வேலைப்பாடுகளுடன் இன்டீரியர் மிகவும் பிரிமீயமாக இருக்கிறது. முழுவதும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியரும், காரின் வெளிப்புற வண்ணத்திற்கு தக்கவாறான அலங்கார வேலைப்பாடுகளும் சிறப்பு சேர்க்கிறது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த காரில் 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரின் ஸ்டீயரிங் வீலில் பல்வேறு கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. விசேஷமான ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டனும் உள்ளது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரில் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 631 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி, அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த காரில் லம்போர்கினி நிறுவனத்தின் டைனமிக் ஸ்டீயரிங் தொழில்நுட்ப வசதி மூலமாக 4 வீல் டிரைவ் சிஸ்டமாகவும் இயக்க முடியும்.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடலாகவும் இருக்கிறது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்த காரில் ஸ்போர்ட், கார்ஸா, ஸ்ட்ரேடா ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் ஸ்டீயரிங் வீல் மூலமாக மாற்றும் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஹார்டு டாப் எனப்படும் நிலையான கூரை அமைப்புடைய மாடலைவிட இந்த திறந்து மூடும் கூரை அமைப்புடைய கன்வெர்ட்டிபிள் ரக மாடல் 100 கிலோ கூடுதல் எடை கொண்டது.

லம்போ ஹூராகென் ஓபன் டாப் மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது!

லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹார்டு டாப் மாடலைவிட கூடுதல் விலையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வரும் 10ந் தேதி நடைபெறும் விழாவில் இருந்து அனைத்து தகவல்களையும் டிரைவ்ஸ்பார்க் தளம் பகிர்ந்து கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Most Read Articles

மேலும்... #லம்போர்கினி
English summary
Italian sports car manufacturer Lamborghini is all set to launch the Huracan Evo Spyder in India on October 10, 2019. The supercar will be launched at an event in Mumbai with also a new showroom being inaugurated on the very same day.
Story first published: Thursday, October 3, 2019, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X