ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

சூப்பர் கார் தயாரிப்பில் பிரபலமான இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வர்த்தக வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனை தக்கவைக்கும் விதத்தில் புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

அதன்படி, அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சூப்பர் கார் மாடலான ஹூராகென் எவோ காரின் திறந்து மூடும் கூரை அமைப்புடைய ஸ்பைடர் மாடலை இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஷோரூம் திறப்பு விழாவுடன் சேர்த்து இந்த புதிய மாடலை இந்தியாவில் களமிறக்கி உள்ளது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் ஹூராகென் எவோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலான திறந்துமூடும் கூரை அமைப்புடைய கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடலாக ஹூராகென் எவோ ஸ்பைடர் வந்துள்ளது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

இந்த காரின் கூரை வெறும் 17 வினாடிகளில் திறந்து மூடும் வசதியை வழங்குகிறது. கார் 50 கிமீ வேகத்தில் செல்லும்வரை இந்த வசதியை பெற முடியும். கூரையை மடக்கி விரிக்கும் அமைப்பிற்காக காரின் பின்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கார் விபத்தில் சிக்கும்போது பயணிகளை பாதுகாப்பதற்காக இருக்கைகளுக்கு பின்னால் தானியங்கி முறையில் வெளிவரும் ரோல்ஓவர் பார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

இந்த காரின் கூரை மற்றும் அதனை இயக்கும் எலெக்ட்ரோ- ஹைட்ராலிக் அமைப்பு ஆகியவை சேர்ந்து 120 கிலோ கூடுதல் எடை சேர்ந்துள்ளது. அதாவது, 1,542 கிலோ வெற்று எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

ஹூராகென் எவோ சூப்பர் காரின் ஹார்டு டாப் கூரை அமைப்புடைய மாடலைவிட இந்த கன்வெர்ட்டிபிள் ரக மாடல் செயல்திறனில் சற்றே மந்தமானது. அதாவது, 0 - 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.1 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். சாதாரண மாடலைவிட 0.2 வினாடிகள் குறைவாக இருக்கும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 325 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

இந்த அதிவேக சூப்பர் காரை லாவகமாக கட்டுப்படுத்துவதற்கும், செம்மையான ஓட்டுதல் அனுபவத்தையும், பாதுகாப்பையும் பெறுவதற்கும் பல சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. வளைவுகளில் கார் துல்லியமாக திரும்புவதற்கு உதவும் சேஸீஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் வீல் ஸ்டீயரிங் சிஸ்டம், சக்கரங்களுக்கு தேவையான டார்க் திறனை துல்லியமாக பிரித்து வழங்கும் டார்க் வெக்டரிங் சிஸ்டம் ஆகியவை இந்த காரின் சில முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக கூறலாம்.

ரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம்!

புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் சூப்பர் கார் ரூ.4.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபெராரி 488 ஸ்பைடர், ஆடி ஆர்8 ஸ்பைடர் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Italian super car maker, Lamborghini has Huracan EVO Spyder car in India, with prices starting from Rs.4.10 crore.
Story first published: Thursday, October 10, 2019, 13:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X