இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்தியாவில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் விற்பனை புதிய சாதனை படைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

சூப்பர் கார் தயாரிப்பில் உலக பிரபலமான லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் தனது உரஸ் சூப்பர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த சூப்பர் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்தநிலையில், 50வது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி தற்போது இந்தியாவில் டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், லம்போர்கினியின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்தியாவில் பெற்றுள்ளது. இந்த சூப்பர் எஸ்யூவியை வாங்கியோரில் 70 சதவீதம் பேர் முதல் முறையாக லம்போர்கினி காரை வாங்கிய வாடிக்கையாளர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்தியாவில் லம்போர்கினி உள்ளிட்ட சூப்பர் கார்களை வாங்குவோர் ஓட்டுவதற்கு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. மோசமான சாலைகளில் இந்த கார்களை செலுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியும் இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்த நிலையில், லம்போர்கினி எஸ்யூவி இந்த குறைகளை ஓரளவு சமாளிக்கிறது. அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ், மிரட்டலான தோற்றம் ஆகியவை கோடீஸ்வர வாடிக்கையாளர்களை இந்த கார் கவர்ந்து வருகிறது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

லம்போர்கினி உரஸ் எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்த சூப்பர் எஸ்யூவி ரக கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லும். உலகின் அதிவேகமான தயாரிப்பு நிலை எஸ்யூவி மாடல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்களின் நம்பர் -1 சூப்பர் எஸ்யூவியாக மாறி இருக்கிறது.

இந்தியாவில் விற்பனையில் அசத்தும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி கார்!

இந்தியாவில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி ரூ.3 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பென்ட்லீ பென்டைகா, பிஎம்டபிள்யூ எக்ஸ்7, மஸேரட்டி லெவன்ட்டே, மெர்சிடிஸ் மேபக், ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி, ரோல்ஸ்ராய்ஸ் கல்லினர் ஆகிய உயர்வகை எஸ்யூவி கார்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2019, 11:19 [IST]
English summary
Lamborghini has delivered 50th Urus SUV in India and which was launched in here back in Jan 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+