லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

லேண்ட்ரோவர் டிஸ்கவரி சொகுசு எஸ்யூவி காரில் புதிய டீசல் எஞ்சின் தேர்வு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

சொகுசு எஸ்யூவி ரக கார்களில் லேண்ட்ரோவர் டிஸ்கவரிக்கு தனி முத்திரை பதித்த மாடல். தற்போது இந்த எஸ்யூவி 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

இந்த நிலையில், லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியின் எஸ், எஸ்இ, எச்எஸ்இ மற்றும் எச்எஸ்இ டிரிம் ஆகிய அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் வந்திருக்கும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 240 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டர்போ எஞ்சின் தொழில்நுட்பத்ததில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

இந்த எஸ்யூவியில் ஏராளமான சொகுசு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சாய்மான இருக்கை வசதி, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, அடாப்டிப் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் ஆடியோ சிஸ்டம், 10 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

இந்த எஸ்யூவி ஆஃப்ரோடுக்கும் அசங்காத மாடல். இதில், 34 டிகிரி செங்குத்தான பகுதியில் அல்லது சாலையில் ஏறும் அப்ரோச் ஆங்கிள் மற்றும் 27.5 டிகிரி கோணத்தில் இறங்கும் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 900 மிமீ ஆழம் வரை நீர்நிலைகளில் செல்லும். 3,500 கிலோ எடையுடைய வாகனத்தை இழுக்கும் திறன் பெற்றிருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 335 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும், 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் 255 எச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அனைத்து எஞ்சின் தேர்வுகளிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவியில் புதிய டீசல் எஞ்சின் ஆப்ஷன் அறிமுகம்!

புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி ரூ.75.18 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இது மிக குறைவான விலை தேர்வாக அமையும். ஏனெனில், ஏற்கனவே ரூ.92.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலிருந்து இந்த எஸ்யூவி கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2019, 12:47 [IST]
English summary
Land Rover has introduced new 2.0-Litre diesel engine option in Discovery SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+