லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

புதுப்பொலிவுடன் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் விலை குறைவான சொகுசு எஸ்யூவி கார் மாடலாக டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் அடிப்படையில் லேண்ட்ரோவர் எஸ்யூவி பிரியர்களுக்கு இது மிக தோதான மாடலாக இருக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது வெளியானத் தகவல்களின்படி, வரும் ஜனவரி மாதத்தில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

இந்த புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த காரில் புதிய பம்பர் மற்றும் ஏர்டேம் அமைப்புடன் முகப்பு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் டேஷ்போர்டு டிசைனில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகள் உள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

இந்த காரில் புதிதாக 12.3 அங்குல திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. வயர்லெஸ் சார்ஜர், மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், பார்க்கிங் உள்ளிட்ட சமயங்களில் காரின் சக்கரங்கள் தடைகள் மீது மோதுகிறதா என்பதை பார்த்து ஓட்டுவதற்கான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

வெளிநாடுகளில் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த எஞ்சின் தேர்வுகளுடன் 6 ஸபீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகிறது. அத்துடன், குறிப்பிட்ட வேரியண்ட்டுகள் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வர இருப்பதாக தெரிகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக விபரம்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியானது பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ஆடி க்யூ5 மற்றும் வால்வோ எக்ஸ்சி60 ஆகிய எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும். வழக்கம்போல் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த எஸ்யூவி தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Source: IAB

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2019, 12:59 [IST]
English summary
According to a media report, Land Rover is planning to launch the Discovery Sport facelift SUV in India by early next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+