'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் குறிப்பிட்ட எஞ்சின் மாடல்களின் உற்பத்தி இந்தியாவிலேயே துவங்கப்பட்டு இருக்கிறது. இதனால், இறக்குமதி மாடலைவிட விலை கணிசமாக குறைந்துள்ளது. கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் கூட்டணி நிறுவனம் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் துணையுடன் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெற்றுவிடும் நோக்கில் வர்த்தக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

அந்த வகையில், சொகுசு கார் மார்க்கெட்டில் சவாலான விலையில் தயாரிப்புகளை கொடுக்கும் விதத்தில், தனது சொகுசு கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

இந்த திட்டத்தின் கீழ் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகளில் ஜாகுவார் எக்ஸ்ஜே, எக்ஸ்எஃப் மற்றும் லேண்ட்ரோவர் எவோக் உள்ளிட்ட பல மாடல்கள் இந்தியாவிலேய அசெம்பிள் செய்யும் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

இதனால், போட்டியாளர்களைவிட சவாலான விலையில் தனது கார் மாடல்களை ஜாகுவார் - லேண்ட்ரோவர் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் அசெம்பிள் செய்யும் பணிகள் இந்தியாவிலேயே துவங்கப்ப்ட்டுள்ளன.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

அதன்படி, ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியின் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதாக ஜாகுவார்- லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

கடந்த ஆண்டு ஜனவரியில்தான் ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி ரூ.78.83 லட்சம் முதல் ரூ.1.31 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இடையில் விலை ஏற்றம் காரணமாக, ரூ.82,90 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் வெலர் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.72.47 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

இதன்மூலமாக, வெலர் எஸ்யூவியின் விலை ரூ.10 லட்சம் வரை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை லேண்ட்ரோவர் வெலர் எஸ்யூவி வழங்கும்.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் இருவிதமான ட்யூனிங்கில் கிடைக்கும். அத்துடன் இந்த இரண்டு எஞ்சின் மாடல்களும்தான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

சக்திவாய்ந்த 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடல் தொடர்ந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வசதிகளை பொறுத்து தலா 4 வேரியண்ட்டுகளில் இந்த எஞ்சின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

அட்டகாசமான டிசைன் மட்டுமின்றி, ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பார்க் அசிஸ்ட், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, வைஃபை வசதி, ஆக்டிவிட்டி கீ என்று பட்டியல் நீள்கிறது.

'மேட் இன் இந்தியா' ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவி அறிமுகம்: விலை கணிசமாக குறைந்தது!

நாடு முழுவதும் உள்ள 27 அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் புதிய ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவிக்கு முன்பதிவு இன்று துவங்கப்பட்டு இருக்கிறது. மே முதல் வாரத்தில் டெலிவிரி கொடுக்கப்படும் என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Article Published On: Tuesday, April 9, 2019, 13:42 [IST]
English summary
Landrover Opens Bookings For CKD Velar SUV In India.
மேலும்... #லேண்ட்ரோவர்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+