2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

உலகின் அதிசக்திவாய்ந்த லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் புரோட்டோடைப் மாடல்களின் உற்பத்தி சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இங்கிலாந்தை சேர்ந்த லோட்டஸ் நிறுவனம் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. சீனாவை சேர்ந்த கீலி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் லோட்டஸ் நிறுவனம் செயல்படுகிறது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இந்த நிலையில், கீலி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை லோட்டஸ் உருவாக்கி இருக்கிறது. லோட்டஸ் எவிஜா (எவியா) என்ற பெயர்களில் குறிப்பிடப்படும் இந்த அதிசக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அண்மையில் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

எவிஜா அல்லது எவியா என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்தான் தற்போதைக்கு உலகின் அதிசக்திவாய்ந்த கார் மாடலாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்த காரின் திறன் வாய்ந்த பேட்டரிகள் மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 2,000 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

புகாட்டி சிரோன் ஹைப்பர் பெட்ரோல் கார் 1,500 எச்பி பவரையும், மஹிந்திராவின் கீழ் செயல்படும் பினின்ஃபரீனா நிறுவனத்தின் பேடிஸ்ட்டா மற்றும் ரிமாக் சி டூ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்கள் 1,914 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், அதனை விஞ்சிய செயல்திறனுடன் இந்த புதிய லோட்டஸ் எவிஜா கார் வர இருக்கிறது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

மொத்தமாக 130 எவிஜா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கார் தற்போது ஹெத்தல் என்ற இடத்தில் உள்ள சோதனை ஓட்டக் களத்தில் வைத்து அதிவேகத்தில் இயக்கி சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதுதவிர்த்து, ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான கார் பந்தய களங்கள் மற்றும் சாதாரண பொது சாலைகளில் வைத்தும் சோதனைகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இந்த காரில் இருக்கும் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 2,000 எச்பி பவரையும், 1,700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள்ளும், 0 - 300 கிமீ வேகத்தை 9 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 322 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 எச்பி பவருடன் மிரட்டும் லோட்டஸ் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இந்த நிலையில், இந்த காரின் புரோட்டோடைப் மாடல்களின் உற்பத்தி லோட்டஸ் ஆலையில் துவங்கி இருக்கின்றன. இந்த காருக்கு இந்திய மதிப்பில் ரூ.19 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.2.3 கோடி முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Lotus has started intial production of world's most powerful Evija electric hyper car in Hethel plant in UK.
Story first published: Tuesday, December 3, 2019, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X