'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

'மேட் இன் சீனா' மாடல் 3 கார்களுக்கான முன்பதிவை டெஸ்லா தற்போது தொடங்கியுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் வருகையை இந்தியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ், மாடல் எக்ஸ் மற்றும் மாடல் 3 ஆகிய கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

டெஸ்லா நிறுவனம் தற்போது வரிசையாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்க தொடங்கியுள்ளது. இதில், சீன மார்க்கெட்டும் ஒன்று. சீனாவில் டெஸ்லா நிறுவனம் மாடல் 3 கார்களை விற்பனை செய்து வருகிறது.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

ஆனால் தற்போது வரை சீன மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் டெஸ்லா மாடல் 3 கார்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இந்த சூழலில் 'மேட் இன் சீனா' டெஸ்லா மாடல் 3 கார்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

டெஸ்லா நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், சீனாவில் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையை இறுதி செய்தது. இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள முதல் மாடல் டெஸ்லா மாடல் 3 கார்தான். இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

இந்த சூழலில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மாடல் 3 காரின் விலையை டெஸ்லா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மேட் இன் சீனா மாடல் 3 கார்களுக்கான முன்பதிவையும் டெஸ்லா நிறுவனம் ஏற்க தொடங்கியுள்ளது.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

மேட் இன் சீனா மாடல் 3 காரின் ஆரம்ப விலை 3,28,000 யுவான்கள். இந்திய மதிப்பில் தோராயமாக 34 லட்ச ரூபாய். சீன வாடிக்கையாளர்கள் 20,000 யுவான்களை முன்பணமாக செலுத்தி, மேட் இன் சீனா டெஸ்லா மாடல் 3 கார்களை புக்கிங் செய்து கொள்ளலாம்.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

இன்னும் 6 முதல் 10 மாதங்களுக்கு உள்ளாக சீன வாடிக்கையாளர்களுக்கு மேட் இன் சீனா மாடல் 3 கார்களை டெலிவரி செய்யும் பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக Electrek செய்தி வெளியிட்டுள்ளது.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

சீனாவில் விற்பனை செய்யப்படும் மேட் இன் அமெரிக்கா மாடல் 3 கார்களை காட்டிலும், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மாடல் 3 கார்களின் விலை 49 ஆயிரம் யுவான்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாடல் 3 கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

இந்த நேரத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எப்போது களமிறங்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் டெஸ்லாவின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

'மேட் இன் சீனா' மாடல் 3 புக்கிங் தொடக்கம்... டெஸ்லாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும் கூட இந்தியாவில் கால் பதிக்க விரும்புவதாக சமீபத்தில் குறிப்பிட்டார். டிவிட்டரில் இந்தியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். அனேகமாக நடப்பாண்டு அல்லது அடுத்தாண்டிற்குள் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வந்து விடும் என எதிர்பார்ப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2019, 19:22 [IST]
English summary
Made In China Tesla Model 3 Pre-booking Begins. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+