தொடர் புகார் எதிரொலி... ஓலா, ஊபர் டிரைவர்கள்மீது பாயும் போக்குவரத்துத்துறை... எதற்கு தெரியுமா..?
தொடர் புகாரின் எதிரொலியாக மாநில போக்குவரத்துத்துறை ஓலா மற்றும் ஊபர் கால் டாக்ஸி டிரைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் பெரு நகரங்களில் பொதுத்துறை வாகனங்களைக் காட்டிலும் ஓலா மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்களின் வாடகை கார்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைய நினைக்கும் நபர்கள் அளிக்கும் ஆதரவே இதற்கு முக்கிய காரணம்.
மேலும், பொதுத்துறை வாகனங்களில் அதிகரித்து வரும் கட்டணம் மற்றும் போதுமான வாகனமின்மை உள்ளிட்டவற்றிகு வாடகை வாகனங்களே தீர்வாக காணப்படுகின்றன.

எனவே, இந்தியாவின் பெரு நகரங்களில் வாடகை வாகனங்களுக்கு அளவுகடந்த ஆதரவு அளிக்கப்பட்டு வருகின்றன.
அதிலும், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களுக்கு அது ஏகபோகமாக உள்ளது. ஆகையால், இந்நிறுவனத்தின் வாகனங்களே பெரு நகரங்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன.

ஒருபக்கம், இந்த வாகனங்களின் பயன்பாடு அதீத வளர்ச்சியை அடைந்து வந்தாலும், மறுபக்கம் அதே நிறுவனங்களின் ஓட்டுநர்களால் அரங்கேறும் முறைகேடுகளும் பல மடங்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில், பயணிகளுடன் மோதலில் ஈடுபடுதல், பயணங்களை ரத்து செய்தல், மீட்டருக்கு அதிகமாக கட்டணத்தை வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால், ஓட்டுநர்களின் முறைகேடான இந்த நடவடிக்கைகுறித்த பயணிகள் அவ்வப்போது புகார்கள் அளித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை இத்தகைய ஓலா மற்றும் ஊபர் கேப் டிரைவர்களுக்கு இரும்பு கரம் நீட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக, அண்மையில் எ வீக்-லாங் டிரைவ் என்ற நிகழ்வினை மும்பை விமான நிலையம் அருகில் அது நிகழ்த்தியது.
இதில், முறைகேட்டில் ஈடுபடும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் எதிரொலியாக 990க்கும் மேற்பட்ட ஓலா மற்றும் ஊபர் டிரைவர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி வாகனங்களை இயக்கி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் மிக முக்கியமாக பல வாகன ஓட்டிகள், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பேட்ஜ் உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கி வந்தது தெரியவந்தது. பேட்ஜ் என்பது வாடகை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டிய ஓர் அனுமதி உரிமம் ஆகும். ஆனால், இது இல்லாமல் பெருவாரியான ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மஹாராஷ்டிராவில் செயலி (செல்போன் ஆப்) சார்ந்து இயங்கும் வாடகை வாகனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டங்கள் இல்லாததே இத்தகைய முறைகேடுகளுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.
அதற்கேற்ப வகையில், கத்துவா கமிட்டியில் மாநில அரசு இன்னும் இணைந்து செயல்பட ஆரம்பிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கத்துவா கமிட்டியானது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, கட்டணங்களை ஒழுங்குப்படுத்துவது போன்றவற்றிற்காக கொண்டுவரப்பட்ட ஓர் திட்டமாகும்.
அண்மைக் காலங்களாக வாடிக்கையாளர்கள் அளித்து வந்த புகார்களின் அடிப்படையில் ஆர்டிஓ சிறப்பு அதிகாரிகள் பிரிவு பிரத்யேக வேட்டையை நடத்தினர்.

குறிப்பாக, புக் செய்யப்பட்ட வாகனம் டிரைவர் சார்பில் ரத்து செய்யப்பட்டு வேறொரு புக்கிங்கை எடுத்துக் கொள்வது மற்றும் திட்டமிட்டு முன்பதிவு செய்யும் பயணத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இழுத்தடிப்பு செய்வதுபோன்ற பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில், சிறப்பு அதிகாரிகள் மும்பை விமான நிலையத்தை மையமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பல்வேறு முறைகேடில் ஈடுபட்ட ஓலா மற்றும் ஊபர் வாகன ஓட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து இதுவரை 21.77 லட்சம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீவிர வேட்டை கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து, ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் சார்பிலும் ஏற்கனவே முறைகேடான பார்ட்னர்கள்குறித்து தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

இதைவைத்தும் தற்போது ஆர்டிஓ அதிகாரிகள் தங்களின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, வாடகை வாகனங்களில் அவகார பாதுகாப்பு உபகரணங்களான தீயணைப்பான் போன்றவை இருக்கின்றனவா என்ற ஆய்வும் செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








