மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்தியாவின் சிறந்த எஸ்யூவி மாடல் என்ற பெருமை மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு உண்டு. இதன் அதிக செயல்திறன் மிக்க மாடலானது பொலிரோ பவர் ப்ளஸ் என்ற பெயரில் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

வெளிப்புறத்தில் விசேஷமான அலங்கார ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருப்பது தனித்துவத்தை வழங்குகிறது. உட்புறத்தில் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்ட சீட் கவர்கள், மிதியடிகள், ஸ்கஃப் பிளேட்டுகள், ஸ்டீயரிங் வீல் கவர் ஆகியவை கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

கூடுதல் ஆக்சஸெரீயுடன் பிரம்மாண்டமாக தெரியும் முன்புற பம்பர், பனி விளக்குகள், ஸ்பாய்லர் மற்றும் ஸ்டாப் லேம்ப் ஆகியவையும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. இந்த கூடுதல் அம்சங்கள் மூலமாக கூடுதல் மதிப்பை இந்த மாடல் பெற்றுள்ளது.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவி காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கான விலை விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால், சாதாரண மாடலைவிட ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். இதுதொடர்பாக, அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக விரைவில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதுதவிர்த்து, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியானது 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 180 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படமாட்டாது என்று மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2019, 16:02 [IST]
English summary
Mahindra has launched Bolero Power Plus Special Edition model in India.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+