உபேர் நிறுவனத்துடன் கைகோர்க்கும் மஹிந்திரா: காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்
இந்தியாவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா நாட்டின் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க புதிய திட்டத்துடன் அமேரிக்க நிறுவனமான உபேர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா பல்வேறு வெற்றிகரமான கார் மற்றும் ஜீப்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்த எக்ஸ்யூவி 300 அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளை பெற்று போட்டி நிறுவனங்களை நடுங்க வைத்தது. மேலும் மஹிந்திராவின் புதிய பொலிரோ மற்றும் டியூவி 300 விரைவில் விற்பனைக்கு களம் இறங்குகிறது. இதில் ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா பொலிரோ இதன் போட்டி நிறுவனங்களை விற்பனையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு மின் கார்களை உற்பத்தி செய்ய கார் நிறுவனங்களை சலுகைகள் அளித்து ஊக்குவித்து வருகிறது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது மின்சார கார்களை தயாரித்து வருகின்றனர். மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்த இ2ஒ மற்றும் இ2ஒ ப்ளஸ் கார்கள் விற்பனையில் மந்தமானது. இதனால் மஹிந்திரா இ2ஒ ப்ளஸ் காரினை ஹேட்ச்பேக் காரக மாற்றி உள்ளனர். மேலும் மற்றொரு புதிய இவெரிட்டோ காரினையும் தயாரித்து வருகிறது.

இ2ஒ ப்ளஸ் ஹேட்ச்பேக் மற்றும் இவெரிட்டோ காரினை மக்களிடம் பிரபல படுத்தவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்திலும் மஹிந்திரா நிறுவனம் அமேரிக்க நிறுவனமான உபேர் நிறுவனத்திற்கு 50 இ2ஒ ப்ளஸ் மற்றும் இவெரிட்டோ கார்களை தரவுள்ளது. இந்த திட்டம் மூலம் மக்களிடம் எளிதாக மஹிந்திராவின் இகார்களை கொண்டு சேர்க்க முடியும். உபேர் நிறுவனம் நாட்டில் பல முன்னணி மாநிலங்களில் தனது சேவையை விரிவு படுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மஹிந்திரா நிறுவனம் உபேர் உடன் கைகோர்த்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உபேர் நிறுவனம் தனது முதல் சேவையை துவங்கியது. அதன் பின்னர் பல மாநிலங்களில் உபேர் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தியது. அதன் பின்னர் பல வழக்குகள் மற்றும் சர்ச்சையில் சிக்கிய உபேர் நிறுவனம் தனது கிளை நிறுவனமான உபேர் ஈட்ஸ் படு தோல்வி அடைந்ததால் வியாபார சந்தையில் திணறியது. உபேரின் புதிய சிஇஓ தாரா கொஸ்ரோஷாஹி உபேர் நிறுவனத்தை மீண்டும் வியாபார சந்தையில் தலை நிமிர வைத்தார்.

இந்நிலையில் தற்போது பெரிய நிறுவனமான மஹிந்திரா உடன் வணிக ஒப்பந்தம் செய்தது உபேர் நிறுவனத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. இதன் மூலம் உபேர் நிறுவனம் மஹிந்திராவுடன் இனைந்து இந்தியாவில் மேலும் பல நகரங்களில் உபேர் நிறுவன சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் மூலமாக உபேர் பயணிகள் பயனடைவதன் மூலம் மஹிந்திரா இ2ஒ ப்ளஸ் ஹேட்ச்பேக் மற்றும் இவெரிட்டோ கார்களுக்கு அது ஒரு விளம்பரமாக இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் என மஹிந்திரா நிறுவனம் கருதி உபேர் நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் கூறியபோது; மஹிந்திரா நிறுவனம் 50 இ2ஒ ப்ளஸ் ஹேட்ச்பேக் மற்றும் இவெரிட்டோ காரினை உபேர் நிறுவனத்திற்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் மின்சார கார்கள் உபயோகத்தை மக்களிடம் கொன்று சேர்க்க முடியும். மேலும் தற்போது 30 இடங்களில் மஹிந்திரா நிறுவனம் இ-சார்ஜ் நிலையங்களை துவங்கவுள்ளது. மஹிந்திரா மின்சார கார்களை தேர்வு செய்யும் உபேர் நிறுவனத்தின் ஓட்டுனர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என மகேஷ் கூறியுள்ளார்.

தங்களின் மின்சார கார்களை மக்களிடம் கொண்டு செல்லவும் மக்களிடம் மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் உபேர் நிறுவனத்துடன் கைகோர்த்து மஹிந்திரா நிறுவனம் எடுக்கும் இந்த முயற்சி மற்ற கார் நிறுவனங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மற்ற நிறுவனமும் உபேர் மற்றும் ஓலா போன்ற நிறுவங்களுடன் இனைய மஹிந்திரா நிறுவனத்தின் இந்த திட்டம் சிறந்த உதாரணமாக இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








