ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

கேரளா பெருவெள்ளத்தின்போது உதவிய ஜீப்பிற்கு, போலீஸார் நன்றி கடனாக அபராத செல்லாணை வழங்கியுள்ளனர். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் மாற்றத்தை (மாடிஃபை) செய்வது சட்டவிரோதமானது ஒன்றாக கருதப்படுகின்றது.

அந்தவகையில், ஒரு சில கருவிகளைத் தவிர்த்து, வாகனங்களுக்கு அழுகு சேர்க்கும் விதமாக அணிகலன்கள் அல்லது உபகரணங்களை கூடுதலாக இணைப்பது சட்டத்தின் பார்வையில் குற்றமாகும்.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

கார் ஜன்னல் கண்ணாடிகளை வெளிச்சம் புகாத வகையில் கருப்பு நிறமாக மாற்றுவது முதல் கூடுதல் மின் விளக்குகளை சேர்ப்பது வரை சட்டவிரேதமானதுதான்.

இந்த செயலை சட்டவிரோதமானது என்ற விதியை உச்ச நீதிமன்றம் கொண்டுவந்தது குறிப்பிடத்தகுந்தது. கார்களுக்குள் நிகழும் குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுவதன் காரணமாக இந்த புதிய விதியை அது கொண்டு வந்தது.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

கடந்த 2012ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த விதியின்கீழ், கேரளாவில் ஒரு ஜீப் உரிமையாளர் சிக்கியுள்ளார். மேலும், அவருக்கு தற்போது ரூ. 3,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமாக, இதே ஜீப்பை கேரள வெள்ளத்தின் போது அம்மாநில போலீஸார், மீட்பு பணிக்காக பயன்படுத்தியிருந்தனர். அந்த ஜீப்பின் புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்...

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

காரின் ஜன்னல்களுக்கு கருப்பு நிற கண்ணாடி மற்றும் அதிக வெளிச்சத்தில் ஒளிரக் கூடிய எல்இடி மின்விளக்குகள் ஆகியவை பொருத்தியிரந்த காரணத்திற்காக மஹிந்திரா ஜீப்பின் உரிமையாளருக்கு போலீஸார் இத்தகைய அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.

இந்த அபராதம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களில் சந்தைக்கு பிறகான மின் விளக்குகளைப் பொருத்துவது குற்றமாக கருதப்படும்நிலையில், அந்த மின் விளக்கினை ஜீப்பின் ஹெட்லைட் உயரத்தைக் காட்டிலும் மேலாகப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

இதுபோன்று, உயரமான இடத்தில் மின் விளக்குகளைப் பயன்படுத்துவது ஆபத்தான ஒன்று. ஆகையால், இதனைப் பயன்படுத்த வேண்டுமானால், ஆர்டிஓ அதிகாரிகள் மூலம் உரிமம் பெற்று ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு பல விதிகள் உள்ளன. இதனை மீறிப் பயன்படுத்தும்பட்சத்தில் அந்த வாகனத்தின் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

இதேபோன்று, கருப்பு நிற ஜன்னல்களைக் கொண்ட பயன்படுத்துவதால் பல்வேறு முறைகேடுகள் வெளியில் இருப்பவர்கள் தெரிவதில்லை. இதுபோன்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

எனவே, சந்தைக்கு பிறகான உபகரணங்களை வாகனங்களில் பொருத்துவதற்கு மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை. இருப்பினும், அதை மீறும் வாகன ஓட்டிகள் இவ்வாறு சட்டத்தின் பிடியில் சிக்குகின்றனர்.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த ஜீப், மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால், கடந்த வருடம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களை மீட்க பேருதவியாக இந்த ஜீப் இருந்தது. அப்போது, இந்த ஜீப்பினை பேலீஸார் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

அந்த நேரத்தில் இந்த ஜீப்பினை மட்டுமின்றி மேலும் சில ஜீப்களையும் போலீஸார் பயன்படுத்தியிருந்தனர். அவைகளில் சில மாடிஃபை செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

மேலும், வெள்ளத்தின்போது பெரும் உதவியை வழங்கியமைக்காக, அதன் உரிமையாளர்களுக்கு அம்மாநிலத்தின் முதலமைச்சர் முதல் முக்கிய அதிகாரிகள் பாராட்டு மழையையும், விருதுகளையும் வழங்கியிருந்தனர்.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

ஆனால், தற்போது சூழ்நிலை அப்படியே மாறி, அந்த வாகனங்கள்மீதே போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது, அந்த ஜீப் உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி, அம்மாநில மக்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தின்போது இந்த ஜீப்களின் பங்களிப்பை இல்லையென்றால், மீட்பு பணி துரிதமான வேகத்தில் நடைபெற்றிருக்காது என மக்கள் கூறுகின்றனர்.

ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

வாகன ஆர்வளர்களைப் பொருத்தவரை, அவர்களின் சவாரிகளை மிகவும் சௌகரியமாக மாற்றியமைத்துக் கொள்ளும் ஒரு பகுதியாக, மாடிஃபை செய்கின்றனர். ஆனால், அதற்கு இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2019, 12:55 [IST]
English summary
Mahindra Jeep Busted By Cops. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+