மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் சோதனை ஓட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

எஸ்யூவி பிரியர்களுக்கு குறைவான பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல் மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி. ஆனால், விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இந்த நிலையில், கேயூவி100 எஸ்யூவிக்கு புதிய பரிணாமம் கொடுக்க மஹிந்திரா முடிவு செய்தது. அதன்படி, பேட்டரியில் இயங்கும் கேயூவி100 எஸ்யூவியை உருவாக்கி இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

இந்த புதிய கேயூவி100 எலெக்ட்ரிக் கார் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது இந்த புதிய மாடலின் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது லெமன் க்ரீன் ஸ்டூடியோ என்ற தளம் ஸ்பை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மாடல் தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களை பெற்றிருப்பது தெரிகிறது. இந்த காரில் முன்புற ஃபென்டரில் சார்ஜர் பாயிண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏசி சாக்கெட் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட இ2ஓ மற்றும் இ-வெரிட்டோ கார்களைவிட மேம்படுத்தப்பட்ட பேட்டரி மற்றும் மின் மோட்டார் ஆகியவற்றுடன் இ-கேயூவி100 எஸ்யூவி கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

புதிய மஹிந்திரா இ-கேயூவி100 எஸ்யூவியில் இருக்கும் மின் மோட்டார் 40kW பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 16kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பேட்டரி மற்றும் இதர எடை மிக்க பாகங்களுக்கு தக்கவாறு மிக உறுதியான சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. கேபின் மற்றும் பூட் ரூம் இடவசதி ஆகியவை தற்போதுள்ள மாடலை ஒத்திருக்கும் என்று கருதமுடியும்.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி சோதனை ஓட்ட வீடியோ!

பேட்டரியில் இயங்கும் கேயூவி100 எஸ்யூவியில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாறுதல்களை எதிர்பார்க்கலாம். விலையை குறைத்து நிர்ணயிக்கும் விதத்தில், சில சிக்கன நடவடிக்கைகளும் இந்த காரில் இருக்க வாய்ப்புள்ளது.

கூடிய விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வழங்கும் மானியம், வரி குறைப்பு மற்றும் வருமான வரி சலுகைகள் மூலமாக இந்த காரின் விலையானது சரியானதாக இருக்கும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2019, 13:52 [IST]
English summary
Mahindra's KUV100 did not do very well even though it was a fairly good looking crossover with a spacious cabin. Mahindra is now trying to resurrect the KUV100, and give the micro crossover a new life. An electric variant of the little SUV was spotted recently, and spy pics taken by Lemon Green Studios are now doing the rounds.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+