மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் வழக்கமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு பதிலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. எனினும், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வருவது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமான விஷயமாக இருந்து வருகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

ஆனால், அறிமுகம் செய்யப்பட்டபோதே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

இந்தநிலையில், மஹிந்திரா மராஸ்ஸோ காரில் வழக்கமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு பதிலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனைவிட ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொருத்துவதற்காக செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறைவாக இருக்கும். மேலும், விலையையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைவிட ஏஎம்டி கியர்பாக்ஸில் அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெறும் வாய்ப்பு இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால், மாருதி எர்டிகாவுக்கு போட்டியை கொடுக்க முடியும் என்று மஹிந்திரா கருதுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சம் கொண்ட எஞ்சினுடன் கார்களை அறிமுகப்படுத்துவது கட்டாயமாகிறது. அதற்கு முன்னதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

தற்போது மஹிந்திரா மராஸ்ஸோ கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டாலும், அதுகுறித்த எந்த அறிவிப்பையும் மஹிந்திரா இதுவரை உறுதியாக தெரிவிக்கவில்லை. எனினும், மாசு உமிழ்வு விதிகள் கடுமையாகி வருவதால் பெட்ரோல் ஆப்ஷனையும் மஹிந்திரா களமிறக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சர்ரவுண்ட் கூல் சிஸ்டம் கொண்ட ஏர்கண்டிஷன் வசதி, ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ்!

ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Autocar India reports that the Mahindra Marazzo MPV will indeed come with an automatic variant before the new BS-VI emission norms kick in by April 2020. The company had initially announced that the MPV will get a torque-converter automatic transmission, but latest reports suggest it's an AMT unit. It will be replaced by the better-functioning torque-converter version at a later stage.
Story first published: Wednesday, February 13, 2019, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X