இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

எக்ஸ்யூவி300 காரில் இருந்த ஒரே ஒரு குறையையும் மஹிந்திரா நிறுவனம் நிவர்த்தி செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிட்டு வருகிறது. எக்ஸ்யூவி300 காரில் மஹிந்திரா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களையும் வழங்கியுள்ளது.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. ஆனால் இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

ஏஎம்டி (AMT - Automated Manual Transmission) ஆப்ஷன் இல்லாதது மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் குறையாக இருந்து வந்தது. ஆனால் அந்த குறையை மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளது. ஆம், எக்ஸ்யூவி300 காரின் டீசல் இன்ஜின் உடன் மஹிந்திரா நிறுவனம் ஏஎம்டி ஆப்ஷனை வழங்கவுள்ளது.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டீசல் இன்ஜினில் மேக்னெட்டி மெரெல்லி நிறுவனத்தின் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் நேரடி போட்டியாளர்களான மாருதி சுஸுகி மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களிலும் இதே நிறுவனத்தின் ஏஎம்டி தொழிற்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

இந்த சூழலில் எக்ஸ்யூவி300 காரின் டீசல்-ஏஎம்டி வேரியண்ட்டிற்கான முன்பதிவுகளை மஹிந்திரா டீலர்கள் ஏற்க தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் டீசல்-மேனுவல் வேரியண்ட்களை காட்டிலும், டீசல்-ஏஎம்டி வேரியண்ட்டின் விலை 50 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் இன்ஜின் உடனும் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். தற்போதைக்கு டீசல்-ஏஎம்டி வேரியண்ட்டை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல்-ஏஎம்டி அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. அதே சமயம் பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.7.90 லட்சம் முதல் ரூ.11.49 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமே இல்லை. 7 ஏர் பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், 5 பயணிகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள், ஏபிஎஸ், இபிடி, டிராக்ஸன் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் என எக்ஸ்யூவி300 காரின் பாதுகாப்பு வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இருந்த ஒரே ஒரு குறையையும் நிவர்த்தி செய்து மஹிந்திரா அதிரடி.. மாருதி, டாடாவிற்கு புதிய சவால் இதுதான்

அதேபோல் எலெக்ட்ரிக் சன் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்ஸ், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் ஆகிய வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏஎம்டி ஆப்ஷன் இல்லாதது மட்டுமே பெரும் குறையாக இருந்து வந்தது. தற்போது அதுவும் நிவர்த்தியாக போகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2019, 18:48 [IST]
English summary
Mahindra Opens Bookings For XUV300 Diesel-AMT. Read in Tamil
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+