மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

எஸ்யூவி ரக கார்கள் தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையை வழங்கும் விதத்தில், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

வாடிக்கையாளர்களுக்கு தரமான உதிரிபாகங்கள் எளிதாக கிடைக்கும் நோக்குடன் புதிய வசதியை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. தனது தயாரிப்புகளுக்கு தேவையான தரமான உதிரிபாகங்களை இருந்த இடத்திலிருந்தே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

மஹிந்திராவின் www.m2all.com என்ற விசேஷ இணையதள பக்கத்திற்கு சென்று வேண்டிய உதிரிபாகங்களை ஆர்டர் செய்தால், வீட்டிற்கே டெலிவிரி கொடுக்கப்படும். மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 எஸ்யூவி முதல் அல்டுராஸ் ஜி4 வரையிலான அனைத்து கார்களுக்குமான ஒரிஜினல் உதிரிபாகங்களை இந்த இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்ய முடியும்.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

உதிரிபாகங்களின் படங்கள், அதன் அடையாள எண், விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது 1,000 உதிரிபாகங்களுக்கு மேல் அந்த இணையதளத்தில் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. பல புதிய உதிரிபாகங்களும் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

இந்த புதிய வசதி மூலமாக, மஹிந்திரா டீலர்களில் மட்டுமே சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் தவிர்க்கப்படும். பிற மெக்கானிக் கராஜ்களிலும் மஹிந்திரா கார்களை குறைவான கட்டணத்தில் சர்வீஸ் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலி உதிரிபாகங்களை தவிர்க்கும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

முதல்கட்டமாக நாட்டின் 20 முக்கிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த இணையதளம் மூலமாக உதிரிபாகங்களை ஆர்டர் செய்யும் வசதி அளிக்கப்ப்டடுள்ளது. ஆர்டர் செய்யப்படும் உதிரிபாகங்கள் வீட்டிற்கே டோர் டெலிவிரி பெறும் வசதியும் உள்ளது.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

கார்களை பழுது நீக்குவதற்கான உதிரிபாகங்கள் மட்டுமின்றி, மஹிந்திரா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விரும்பும் கூடுதல் ஆக்சஸெரீகளையும் இந்த இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து வாங்க முடியும் என்பதும் சிறப்பு. இதற்காக, டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களுக்கு செல்லும் அலைச்சலையும் தவிர்க்க முடியும்.

மஹிந்திரா கார்களுக்கான உதிரிபாகங்களை டோர் டெலிவிரி பெறும் வசதி!

ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உதிரிபாகங்களுக்கு வாரண்டியையும் வழங்குகிறது மஹிந்திரா. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக உதவும் விதத்தில் 24 மணிநேர உதவி மையமும், இமெயில் வாயிலாகவும் குறைகளை தெரிவிக்கும் வசதியும் உள்ளது என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இது நிச்சயம் மஹிந்திரா கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2019, 10:43 [IST]
English summary
Mahindra original spare parts to be sold online.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+