லாபம் கிடைக்கவில்லை எனில் டிரக்கை திருப்பி கொடுங்கள்: மஹிந்திராவின் அதிரடி அறிவிப்பு!
மஹிந்திரா நிறுவனம், கடந்த செவ்வாய்கிழமை அன்று பியூரியோ என்ற புதிய கனரக வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், இதன் விற்பனையை அதிகரிக்கும் விதமாக அதிக லாபம் அடையுங்கள், இல்லையெனில் டிரக்கை திரும்பிக் கொடுங்கள் என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களையும் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஆட்டோ, கார், டிரக் உள்ளிட்ட பல்வேறு வகையான கனரக வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்து வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் வாகனச் சந்தையில் 8-10 சதவிகித இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதில், பெரும்பாலும் சரக்கு ஏற்றிச் செல்ல உதவும் டிரக்குகள், மினி வேன்களே அதிகம் உள்ளன.

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, கமர்ஷியல் வாகன விற்பனையில் மட்டும் 25 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த கமர்ஷியல் வாகன விற்பனையில் நான்காவது இடமாகும். இதைத்தொடர்ந்து, கமர்ஷியல் வாகன விற்பனையில் மஹிந்திரா ஜாம்பவனாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனரக வாகன சந்தையில் ஏற்பட்ட சிறிய இடைவெளியைக் குறைக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை அன்று பியூரியோ என்னும் கமர்ஷியல் வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்தது.

மேலும், ரூ. 600 கோடி முதலீட்டில் மஹிந்திரா நிறுவனம் பியூரியோ வாகனத்தில் 21 புதிய மாடல் வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்த மாடல் வாகனங்களுக்கு இதாலியன் டிசைன் நிறுவனமான பினின்ஃபர்னியா சிறந்த வடிவமைப்பை செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் சில சலுகைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் ஈடி செய்திக்கு, அந்நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவின் தலைவர் ராஜன் வதேரா கூறியதாவது,

"சந்தையில் ஏற்பட்டுள்ள சிறிய இடைவெளியைக் குறைக்கும் விதமாக 'பியூரியோ' கனரக வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் மன நிலையை அறிந்து அவர்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களுக்கு பேங்கிங் மற்றும் சில சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் தனது போட்டியாளர்களைக் கலங்கடிக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பியூரியோ வாகனத்தில் மூலம் அதிக லாபம் அடையுங்கள், இல்லையெனில் டிரக்கை திரும்பிக் கொடுத்துவிடுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மஹிந்திராவின் இந்த அதிரடி அறிவிப்பால், டாடா மற்றும் விஈ கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். மேலும், இந்த அறிவிப்பு பல முன்னணி நிறுவனங்களையும் திக்கித் தினற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications