இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... புதிய வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா

புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம், மஹிந்திரா நிறுவனம் வரலாறு படைக்கவுள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா...

இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிகப்படியான பெட்ரோல், டீசல் விலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் மந்தமாகவே இருந்து வந்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகங்களும், அச்சங்களுமே இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா...

ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? முழுமையாக சார்ஜ் ஏற எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் வாடிக்கையாளர்களுக்கு இருந்து வந்தன. இதுதவிர சார்ஜிங் ஸ்டேஷன்கள் வேறு போதிய அளவிற்கு இல்லாததால், அச்சமும் நிலவி வந்தது.

இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் 'டல்' அடித்து வந்ததற்கு மற்றொரு முக்கியமான காரணம் விலை. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பதாலும், வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்க தயக்கம் காட்டினர்.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் 2ம் கட்ட ஃபேம் இந்தியா திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா...

கடந்த சில நாட்களுக்கு முன்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

எனவே இனி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், மஹிந்திரா, டாடா, மாருதி, ஹூண்டாய், கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் பயணிக்கும் வகையிலும், விரைவாகவே சார்ஜ் ஏறி விடும் வகையிலுமான எலெக்ட்ரிக் கார்கள் இனி இந்திய மார்க்கெட்டில் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா...

இந்த போட்டியில் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் முன்னணி வகிக்கிறது. மஹிந்திரா நிறுவனம் தனது கேயூவி100 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (e-KUV100), கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.

இந்த கார் 2019ம் ஆண்டின் மத்தியில் ஷோரூம்களுக்கு வரும் என மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா கடந்தாண்டு கூறியிருந்தார். இந்த சூழலில் இன்னும் 6 மாதங்களில், எலெக்ட்ரிக் கேயூவி100 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் காரில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். இதன் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே, 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வெறும் உயர்த்தப்பட்ட ஹேட்ச்பேக் வகை கார்தான் என யாரேனும் வாதிட்டாலும், இதுதான் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி என அந்நிறுவனம் கூறுகிறது. எலெக்ட்ரிக் கேயூவி100 தவிர எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இப்படி ஒரு கார் அறிமுகமாவது இதுதான் முதல் முறை... வரலாறு படைக்கப்போகும் மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எக்ஸ்யூவி300 காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. தற்போது அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் கேயூவி100 விற்பனைக்கு அறிமுகம் ஆனதற்கு ஒரு வருடத்திற்கு பின்பாக, அதாவது அடுத்த ஆண்டின் மத்தியில் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது எஸ்210 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இக்கார், ஒரு முறை சார்ஜ் செய்தால், 350-400 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2019, 16:54 [IST]
English summary
Mahindra Ready To Launch e-KUV100 In India Within 6 Months. Read in Tamil
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X