மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

இந்தியாவில் மின்சார கார்களுக்கான சந்தை வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இதுவரை மின்சார இருசக்கர வாகனங்களுக்கான சந்தை மட்டும் குறிப்பிட்ட அளவு விற்பனையை பதிவு செய்து வந்த நிலையில், தற்போது மின்சார கார்களுக்கான சந்தையும் வலுவாகத் துவங்கியிருக்கிறது.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

இந்த சூழலில், கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனம் 2,000 யூனிட்டுகளுக்கு நெருக்கமான எண்ணிக்கையில் மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ ட்விட்டர் பதிவு மூலமாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதாவது, முதல்முறையாக தங்கள் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனையானது இந்த புதிய எண்ணிக்கைய பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

மஹிந்திரா இ-வெரிட்டோ கார், மஹிந்திரா ட்ரியோ என்ற ஆட்டோரிக்ஷா, இ- சுப்ரோ மினி வேன், இ-ஆல்ஃபா ஆட்டோரிக்ஷா மற்றும் இ2ஓ ப்ளஸ் ஆகிய மின்சார வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. இந்த மின்சார வாகனங்களின் மொத்த விற்பனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

அதேநேரத்தில், ஒவ்வொரு வாகனம் எவ்வளவு விற்பனையானது என்ற விபரம் தற்போது இல்லை கைவசம் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் இ- ட்ரியோ என்ற ஆட்டோரிக்ஷா விற்பனை அதிக எண்ணிக்கையை பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

மஹிந்திரா இ-வெரிட்டோ காரில் 72V லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியின் மூலமாக 110 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 1 மணி 45 நிமிடங்கள் பிடிக்கும். மணிக்கு 86 கிமீ வேகம் வரை இந்த கார் செல்லும். வாடகை கார் மார்க்கெட்டிலும், பொதுத்துறை நிறுவனங்களுக்கான பயன்பாட்டிலும் உள்ளது.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

மஹிந்திரா இ-ட்ரியோ வாகனத்தில் 7.47kW லித்தியம் அயான் பேட்டரி உள்ளது. இந்த வாகனம் 7.4 எச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். நகர்ப்புற பயன்பாட்டிற்கு இ- ஆல்ஃபா மற்றும் ட்ரியோ வாகனங்கள் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

மஹிந்திரா மின்சார வாகன விற்பனையில் எழுச்சி!

மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுப்பட துவங்கியுள்ளதையடுத்து, புதிய மின்சார வாகனங்களின் வெகுவாக அதிகரித்து வருகிறது. விற்பனை உயர்ந்து வருவதையடுத்து, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கேயூவி100 ஆகிய எஸ்யூவிகளின் மின்சார மாடல்களையும் மஹிந்திரா அடுத்த ஆண்டு விற்பனைக்கு களமிறக்க உள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா
English summary
Mahindra CEO Pawan Goenka has revealed that they were sold almost 2000 units of electric vehicles during the month of October 2019.
Story first published: Sunday, November 3, 2019, 13:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X