புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா தார் 700 லிமிடேட் எடிசன் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆஃப்ரோடு சாகச பிரியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி உள்ளது. ஆஃப்ரோடு தகவமைப்புகளை பெற்ற விலை குறைவான மாடல் என்பதே இதனை முன்னிறுத்துவதற்கான காரணமாக உள்ளது. இந்த நிலையில், புதிய கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு விதிகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டு வருகிறது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

தற்போது புதிய தலைமுறை தார் எஸ்யூவி தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இதுவரையில் விற்பனையில் இருந்த மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக, லிமிடேட் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா தார் 700 என்ற பெயரில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் வந்துள்ளது. மொத்தமாக 700 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மஹிந்திரா அறிவித்துள்ளது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா தார் 700 லிமிடேட் எடிசன்் மாடலில் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் புதிய அலாய் வீல்கள், சில்வர் ஃபினிஷிங் செய்யப்பட்ட முன்புற பம்பர், தார் லோகோவுடன் கூடிய உயர் ரக சீட் கவர்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கையெழுத்து பிரதியுடன் கூடிய பேட்ஜ் பொருத்தப்பட்டு இருப்பது இதன் மதிப்பை கூடுதலாக்கும் விஷயமாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா தார் 700 மாடலானது அக்வாமரைன் மற்றும் நெப்போலி பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புதிய வண்ணங்கள் மிகவும் தனித்துவமாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடல் ரூ.9.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா இணையதளம் மற்றும் டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2019, 10:12 [IST]
English summary
India based automotive giant Mahindra & Mahindra Ltd. (M&M Ltd.), announced today the launch of the Thar 700 — the last batch of 700 units of the iconic 4x4 off-road SUV in its current avatar. It comes packed with unique features, and Mahindra say they have competitively priced the SUV at Rs 9.99 lakh, ex-showroom (India).
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+