TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள்!
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன. படங்களையும், கூடுதல் தகவல்களையும் இங்கே காணலாம்.
இந்திய ஆஃப்ரோடு பிரியர்களின் முதன்மை தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி விளங்குகிறது. வடிவம், கட்டுறுதி, சிறப்பான டார்க் திறனை வழங்கும் எஞ்சின், எளிய பராமரிப்பு மற்றும் சரியான விலையில் கிடைப்பதால் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்திலும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை 4x4India ஃபேஸ்புக் பக்கத்தில் உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஸ்பை படங்களின் அடிப்படையில், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி பழைய மாடலைவிட வடிவத்தில் சற்று பெரிய மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏழு இடைவெளிகளுடன் கூடிய மஹிந்திராவின் முத்தாய்ப்பான க்ரில் அமைப்பு, வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகளுடன் பழைய மாடலின் டிசைன் தாத்பரியங்கள் அப்படியே கையாளப்பட்டுள்ளன. எனினும், வடிவத்திலும், தொழில்நுட்ப வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.
MOST READ2019ஐ கலக்க வருகிறது மாருதியின் புத்தம் புதிய இரு மாடல்கள்...
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் முன்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருப்பது ஸ்பை படங்களில் காண முடிகிறது. அதேபோன்று, பின்புற சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
பழைய மாடலின் டேஷ்போர்டு அமைப்பை பின்பற்றியதாகவே புதிய தார் எஸ்யூவியின் டேஷ்போர்டு இருக்கிறது. எனினும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றில் மாறுதல் தெரிகிறது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் இருப்பது போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், வீல் ஆர்ச்சுகள் மிக பெரிதாகவும், சக்கரங்களுடன் அதிக இடைவெளி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கரடு முரடான பாதைகளில் செல்லும்போது சக்கரங்கள் மட்கார்டில் உரசாத வகையில் அமையும். தயாரிப்பு நிலை மாடலில் புதிய பம்பர் இடம்பெறும் என்று தெரிகிறது.
ரேடியேட்டர் பகுதியின் மேல்புறத்தில் இன்டர்கூலர் இடம்பெற்றிருக்கிறது. இதனால், டர்போசார்ஜரின் செயல்திறன் சிறப்பாக அமைவதோடு, ஆரம்ப நிலையில் சிறந்த டார்க் திறனை இதன் எஞ்சின் வெளிப்படுத்தும் என்று கருத முடிகிறது.
MOST READ: ஏப்ரிலியா எஸ்டிஎக்ஸ் 150 பைக் இந்தியாவில் தரிசனம்!
தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.5 லிட்டர் சிஆர்டிஇ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பேஸ் மாடலில் 2.6 லிட்டர் டிஐ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 63 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரமுடைய 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லாக் சிஸ்டத்துடன் கூடிய டிஃபரன்ஷியல் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தையும் இந்த மாடல் பெற்றிருக்கும்.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.