மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

இந்தியாவின் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக மஹிந்திரா தார் விளங்குகிறது. இந்தநிலையில், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக தார் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியானது தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

இந்த சூழலில், தற்போது விற்பனையில் இருந்து வரும் மாடலானது அடுத்த சில மாதங்களில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இந்த மாடலுக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக, பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் என்ற பெயரில் இந்த ஸ்பெஷலான மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மொத்தமாக 700 ஸ்பெஷல் தார் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

இந்த விசேஷ பதிப்பு மாடலில் சிக்னேச்சர் எடிசன் பேட்ஜ் பொருத்தப்பட இருப்பதுடன், முன்புற ஃபென்டரில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் கையெழுத்து பிரதியும் கொடுக்கப்பட இருப்பது முக்கிய சிறப்பாக இருக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

மேலும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் மார்க்ஸ்மேன் எஸ்யூவிகளில் இடம்பெற்றிருக்கும் அதே 15 அங்குல அலாய் வீல்கள் இந்த சிறப்பு பதிப்பு மாடலில் இடம்பெற இருக்கின்றன. தார் சிக்னேச்சர் எடிசனில் பின்வரிசை இருக்கைகள் முன்னோக்கிய வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். மேலும், உட்புறத்தில் சில விசேஷ அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

புதிய மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் மாடலானது நப்போலி பிளாக் மற்றும் அக்வா மரைன் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் வர இருக்கிறது. இந்த சிக்னேச்சர் எடிசன் மாடலுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்!

இதனிடையே, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது.

Source: ACI

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2019, 12:04 [IST]
English summary
Mahindra & Mahindra will launch the Thar Signature Edition to mark the end of production of the current generation Mahindra Thar. Rumor is that the Signature Edition will be a 'goodbye' to the current generation.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+