உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் நாடுதழுவிய சிறப்பு சலுகை சர்வீஸ் முகாமை இந்த மாதம் தொடங்கி இருக்கிறது. இதில், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் கமர்ஷியல் ரக வாகனங்களைத் தயாரிப்பதில் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. அதன்படி, ஆட்டோ, கார், பிக்அப் டிரக் மற்றும் விவசாய பணிக்கான டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு ரக வாகனங்களை தயாரித்து வருகிறது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கமர்ஷியல் ரக வாகனச் சந்தையில் 8 முதல் 10 சதவீத இடத்தை ஆக்கரமிப்பு செய்து உள்ளது. அதில், பெரும்பாலும் சரக்குகளை ஏற்றிச் செல்ல உதவும் டிரக் மற்றும் மினி வேன்களே அதிகமான இடத்தைப் பிடித்துள்ளன. அவ்வாறு, கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத நிதியாண்டில் இந்த நிறுவனம் கமர்ஷியல் வாகனச் சந்தையில் 25 சதவீதம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் பியூரியோ என்ற புதிய சரக்கு ரக வாகனத்தை அறிமுகம் செய்தது. சமீபகாலமாக சரக்கு ரக வாகனங்களின் அறிமுகத்தில் ஏற்பட்ட இடைவெளியை நீக்கும் விதமாக இந்த இந்த டிரக்கை அறிமுகம் செய்ததாக அந்த நிறுவனம் தெரிவத்திருந்தது. இவ்வாறு வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படும் மஹிந்திரா நிறுவனம் தற்போது சிறப்பு சர்வீஸ் முகாம்களை நாடு முழுவதும் நடத்த உள்ளது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையை அளிக்கும் விதமாக சலுகை சர்வீஸ் முகாமை மஹிந்திரா நிறுவனம் தொடங்குகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் இம்மாதம் 4ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்ப சலுகையில் வாகனங்களின் உதிரி பாகம், குறைந்த சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட சலுகை வழங்கப்பட உள்ளது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

'எம்-பிளஸ்' என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாமிற்காக, சுமார் 600க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. சிறப்பு சலுகையுடன் 75 பாயிண்ட் செக்அப்-பினை இலவச காம்பிளிமெண்டரி மஹிந்திரா நிறுவனம் வழங்க உள்ளது.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

மேலும், இந்த சேவையை அணுகும் வாடிக்கையாளர்களின் கார்களுக்கு மேக்ஸி கேர் என்னும் சிறப்பு பேக்கேஜ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், கார்களுக்கு சிறந்த மறையில் பெயிண்டிங் செய்தல், ஆண்டி-கொர்ரிஸன் மற்றும் காரின் உள்பக்க தூய்மைப்படுத்துல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்யப்படும்.

உங்கள் பழைய காரை புதிதாக மாற்ற வேண்டுமா...? - சிறப்பு சலுகை சர்வீஸை அறிமுகம் செய்யும் மஹிந்திரா!

இதுகுறித்து, மஹிந்திரா தரப்பில் கூறியதாவது, இந்த திட்டமானது பழையதாக தோற்றமளிக்கும் காரை புதிதாக மாற்றவும், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வீஸ் சென்டரை அணுகி சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு மஹிந்திரா அஃபிஸியல் ஆப் அல்லது இணையதளத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 2, 2019, 11:19 [IST]
English summary
Mahindra To Hold Nationwide Service Camp On This Month. Read In Tamil.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+