புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மற்றும் தகவல்கள்!
முழுமையாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் வைத்து மஹிந்திரா டியூவி300 நேற்று இரவு சோதனை செய்யப்பட்டபோது இந்த படங்கள் எமக்கு பிரத்யேக கிடைத்தன. இந்த காரில் முக்கிய அம்சமாக பிஎஸ்-6 மாச
பிஎஸ்-6 மாசு உமிழ்வு எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியானது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிரத்யேக ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

முழுமையாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் வைத்து மஹிந்திரா டியூவி300 நேற்று இரவு சோதனை செய்யப்பட்டபோது இந்த படங்கள் எமக்கு பிரத்யேக கிடைத்தன. இந்த காரில் முக்கிய அம்சமாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

இந்த காரில் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் எஞ்சின்தான் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். சோதனை ஓட்டத்தில் இருந்த மாடல் ஆட்டோமேட்டிக் மாடலாக இருக்கும் என்று தெரிய வருகிறது.

எஞ்சினை தவிர்த்து, வடிவமைப்பில் சிறிய அளவிலான மாறுதல்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. க்ரில் அமைப்பு பியானோ பிளாக் என்ற விசேஷ வண்ணத்தில் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று, ஹெட்லைட் க்ளஸ்ட்டரிலும் மாற்றம் இருக்கும். எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த காரில் மெட்டாலிக் க்ரே வண்ணத்திலான 10 ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும். பாடி கிளாடிங் சட்டங்கள் இந்த காரின் எஸ்யூவி முரட்டுத்தனத்தை கூட்டுவதாக இருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் இரட்டை வண்ணத்திலான பிரிமீயம் டேஷ்போர்டு அமைப்பு, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, டிரைவர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, லம்பார் அட்ஜெஸ்ட் வசதி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரிமோட் லாக், கீ லெஸ் என்ட்ரி, ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன.

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். பொழுதுபோக்கு, நேவிகேஷன் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெறலாம்.

புதிய டியூவி300 எஸ்யூவியில் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், டியூவல் ஏர்பேக்குகள், ஆட்டோ டோர் லாக், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெறும்.

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காம்பேகே்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தனித்துவமான தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications