கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் துவக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்றது. எனினும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போட முடியவில்லை. எனினும், போட்டியாளர்களைவிட வித்தியாசமான வடிவமைப்பு காரணமாக, தனி வாடிக்கையாளர் வட்டத்தை அமைத்துக் கொண்டு காலத்தை நகர்த்தி வருகிறது.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் அண்மையில் இதே ரகத்தில் எக்ஸ்யூவி300 என்ற புதிய எஸ்யூவி மாடலை களமிறக்கியது. இது பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டாலும், டியூவி300 எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

இதனை தவிர்த்துக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் தற்போது அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் புதிய முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள் இடம்பெற இருக்கின்றன. பழைய மாடலிலிருந்து சிறிய மாற்றங்களுடன் பொலிவுடன் வர இருக்கிறது.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிவேகம் குறித்த எச்சரிக்கை வசதி, சீட் பெல்ட் அணியவில்லை என்பதை எச்சரிக்கும் கருவி, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற இருக்கின்றன.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் தற்போது 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஆனால், புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. ஆனால், இதுகுறித்த உறுதியானத் தகவல் இல்லை.

கலக்கலான அம்சங்களுடன் வரும் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார்!

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. புதிய டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த எஸ்யூவி தற்போது ரூ.8.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. சற்று கூடுதல் விலையில் புதிய மாடல் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Image Courtesy: The Next COG

More from DriveSpark

Article Published On: Saturday, March 2, 2019, 12:11 [IST]
English summary
Mahindra TUV300 facelift spied testing in India. Mahindra is all set to introduce a facelift version of the TUV300 in the Indian market. The new mid-life update for the TUV300 will offer a number of additional features, including several new safety equipment.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+