மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

கடந்த 2015ம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் ஓரளவு வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. மஹிந்திரா பிரியர்களை கவரும் அம்சங்களுடன் சுமாரான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

இந்த நிலையில், சந்தைப் போட்டி ஒருபுறமும், புதிய பாதுகாப்பு விதிகளும் மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் விற்பனைக்கு நெருக்கடியை அதிகரித்தன. இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

குறிப்பாக, வரும் அக்டோபர் முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு தக்கவாறு கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன் அதற்கு துணையாக கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

மேலும், பம்பர், க்ரில் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கரும் பூச்சு பின்னணியுடன் கூடிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், க்ளியர் லென்ஸ் டெயில் லைட்டுகள் ஆகியவை புதிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

உட்புறத்ததிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய இரட்டை வண்ண இன்டீரியர் அமைப்பு, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக இடம்பெற்றுள்ளன.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் தக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும்,, 240 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

ஏற்கனவே வழங்கப்படும் ஐந்து விதமான வண்ணத் தேர்வுகள் தவிர்த்து கூடுதலாக ஹைவே ரெட் மற்றும் மிஸ்டிக் காப்பர் என்ற இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். தவிரவும், கருப்பு - சிவப்பு , கருப்பு- சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

மேலும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டி4+, டி6+, டி8 மற்றும் டி10 ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். தற்போது டி10 ஆப்ஷனல் பேக் வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதில், லெதர் இருக்கைகள் மற்று் லம்பார் சப்போர்ட் வசதி கூடுதலாக அளிக்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மஹிந்திரா டியூவி300 அறிமுகம்!

புதிய மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியானது ரூ.8.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தவிர்த்து, தனது பங்காளியான மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2019, 14:03 [IST]
English summary
Mahindra TUV300 facelift SUV Launched In India.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+