மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் மிக அசத்தலான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

அடுத்த மாதம் 14ந் தேதி புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாக களமிறங்க இருக்கும் இந்த புதிய மாடல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

இந்த நிலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, இந்த எஸ்யூவி ரக காரில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

தவிரவும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய இந்த வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையிலான இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். மஹிந்திரா மராஸ்ஸோ காரில் இருக்கும் அதே எஞ்சின்தா இந்த எஸ்யூவியிலும் இடம்பெற்றிருக்கும் என்பதால், 121 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் வர இருக்கிறது. ஆனால், பெட்ரோல் எஞ்சின் திறன் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் W4, W6, W8 மற்றும் W8 Optional ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுனருக்கான சிறப்பு உதவி தொழில்நுட்பங்கள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அசத்தும் பாதுகாப்பு அம்சங்கள்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது ரெட் ரேஜ், சன் பர்ஸ்ட் ஆரஞ்ச், பியர்ல் ஒயிட், நபோலி பிளாக், டிசாட் சில்வர் மற்றும் அக்வாமரைன் ஆகிய 6 வண்ணங்களில் தேர்வுக்கு கிடைக்கும்.

ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த மாற்று தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 28, 2019, 12:13 [IST]
English summary
Ahead of its launch in the market, Mahindra has released a new video showcasing all the safety features available on the XUV 300. The video reveals a number of segment-first and best-in-class features and safety equipment available on the upcoming Mahindra XUV 300.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+