காதலர் தினத்தில் கால் பதிக்கவரும் மஹிந்திரா எஸ்யூவி..!!!
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மஹிந்திரா எஸ்யூவி 300 வரும் பிப்ரவரி 15ம் தேதி விற்பனைக்கு வருகிறது. பல்வேறு புதிய மாற்றங்களுடன் வரும் எஸ்யூவி 300 குறித்த கூடுதல் சிறப்பு அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் குவான்டோ, டியூவி 300, நுவோஸ்போர்ட் போன்ற எஸ்யூவி ரக கார்களின் வரிசையில் தனது 4வது தயாரிப்பான மஹிந்திரா எஸ்யூவி 300 காரினை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எஸ்யூவி 300 முதலில் எஸ்201 என்ற பெயரிடப்பட்டது பின்னர் மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி 300 என பெயர் மாற்றி அறிமுகம் செய்தது.

மஹிந்திரா எஸ்யூவி 300 சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் டிசனை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்யூவி 300ன் முன்பதிவு குறித்து மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவிக்காத நிலையில், முக்கிய நகரங்களில் மஹிந்திரா டீலர்கள் முன்பதிவை தொடங்கிவிட்டனர்.

எக்ஸ்யூவி300 காரில் அசத்தலான இன்டிரியர் அமைப்புடன், மிக நேர்த்தியான டிசைனிங் மற்றும் நவீன தலைமுறையினர் விரும்பும் பல்வேறு வசதிகளை பெற்றதாக வரவுள்ளது. குறிப்பாக 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் இடம்பெற உள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

காம்பெக்ட் எஸ்யூவி ரக கார்களில் முதல் முறையாக இரு வாநிலைக்கு ஏற்றவாறு ஏசியை எஸ்யூவி 300ல் அமைத்துள்ளனர். மேலும் 4 டயர்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதியும், 7 பாதுகாப்பு ஏர் பேக்குகள் அமைத்துள்ளனர். மேலும் நீண்ட வீல் பேஸ் மற்றும் புதிய சக்தி வாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டாட்டா நெக்ஸான் ஆகிய கார்களுக்கு போட்டியாக மஹிந்திரா எஸ்யூவி 300 களம் இறங்குகிறது. இந்திய விற்பனை சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாதத்திற்கு 10,000 கார்கள் விற்பனை செய்து முதல் இடத்திலும், டாட்டா நெக்ஸான் விற்பனையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வருகிறது. இரு என்ஜினிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா எஸ்யூவி 300 ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.


Click it and Unblock the Notifications








