ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் W4, W6 மற்றும் W8 என்ற தலா 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

மஹிந்திராவின் கீழ் செயல்படும் சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் W4, W6 மற்றும் W8 என்ற தலா 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி 3,995 மிமீ நீளமும், 1,821 மிமீ அகலமும், 1,617 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,600 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் ரகத்தில் அதிக வீல் பேஸ் கொண்ட மாடல் இதுதான்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக வலம் வரும் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியிலும் கையாளப்பட்டுளளன. இருப்பினும், மிக நேர்த்தியாக கவரும் விதத்திலான தோற்றத்தை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் என கவர்ச்சியாக இருக்கிறது. பேஸ் வேரியண்ட்டிலேயே பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றிருப்பது சிறப்பு.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உட்புற வடிவமைப்பும் சிறப்பாக இருக்கிறது.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். மற்றுமொரு விசேஷ அம்சமாக, ஸ்மார்ட்வாட்ச் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

இந்த காரில் 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இதன்மூலமாக, முன்புற இருக்கைகளுக்கும், பின்புற இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் தாங்கள் விரும்பும் அளவில் குளிர்ச்சி அளவை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். சன்ரூஃப் வசதியும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும்,200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தற்போதைக்கு இல்லை.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரகத்திலேயே மிகச்சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும் மாடலாகவும், ஓட்டுனருக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தையும் தரும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

பேஸ் மாடலில் டூயவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் 7 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

ஆரஞ்ச், சில்வர், கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் கருநீலம் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும். சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் வெள்ளை வண்ணத்திலான கூரையுடன் டியூவல் டோன் வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 5 பேர் பயணிக்க முடியும். இந்த எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும்.

ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

பெட்ரோல் மாடல் ரூ.7.90 லட்சம் ஆரம்ப விலையிலும், டீசல் மாடல் ரூ.8.49 லட்சம் ஆரம்ப விலையிலும் வந்துள்ளன. நிச்சயம் இந்த ரக மாடல்களில் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Petrol Diesel
W4 Rs 7,90,000 Rs 8,49,000
W6

Rs 8,75,000 Rs 9,30,000
W8 Rs 10,25,000 Rs 10,80,000
ரூ.7.90 லட்சத்தில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி அறிமுகம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது. இதுவரை 4,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் சிறந்த தேர்வாக வருவதால் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை தரும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 14, 2019, 13:39 [IST]
English summary
Mahindra has launched its latest SUV, the XUV 300 in the Indian market. The much-awaited sub-four metre SUV from Mahindra comes with a starting price of Rs 7.90 lakh, ex-showroom (India).
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+