புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஸ்பை வீடியோ!
சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் உருவாக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஸ்பை வீடியோவையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.
சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் உருவாக்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் 15ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மஹிந்திரா எக்ஸ்யூவியானது 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு சில மஹிந்திரா டீலர்களில் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 5 பேர் செல்வதற்கான இடவசதி உள்ளது.

இந்த புதிய 2.6 மீட்டர் நீளம் கொண்டிருந்தாலும், காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலாக வர இருக்கிறது. இதனால், உட்புறத்தில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் உருவ சாயல்களுடன் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பேபி எக்ஸ்யூவி500 எஸ்யூவியாகவும் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும்,320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தவிரவும், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எல்இடி பகல்நேர விளக்குகள், 7 ஏர்பேக்குள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான நவீன வசதிகளுடன் வர இருக்கிறது.

இந்த ரகத்தில் உள்ள வலிமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பை வழங்கும் விதத்தில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது. சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியை அல்டுராஸ் ஜி4 என்ற பெயரில் மஹிந்திரா ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது ரீபேட்ஜ் மாடலாக எஸ்யூவி300 எஸ்யூவி வருகிறது.


Click it and Unblock the Notifications








