புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

வரும் 14ந் தேதி மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட ஜாம்பவான் மாடல்களை எதிர்கொள்ளும் விதத்தில் ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது. அதனை தொடர்ந்து காணலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

எஞ்சின்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மஹிந்திராவின் புளூ சென்ஸ் மொபைல் அப்ளிகேஷனை இது சப்போர்ட் செய்யும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

புளூ சென்ஸ் ஆப்

கைக்கடிகாரம் போல இருக்கும் ஸ்மார்ட்வாட்ச் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை புளூ சென்ஸ் மொபைல் ஆப் வழங்கும். க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சர்வீஸ் ரிமைன்டர், வண்டியின் ஆவணங்கள் மற்றும் அவசர கால உதவி அழைப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

சிறப்பான பாதுகாப்பு

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட இருக்கின்றன. இதனால், இந்த ரகத்தில் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் மாடலாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

டிஸ்க் பிரேக் சிஸ்டம்

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற இருக்கிறது. இதுவும் பாதுகாப்பை உறுதி செய்யும் விஷயமாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

கண்ணாடி கூரை

இந்த காரில் சன்ரூஃப் வசதியும் டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட இருக்கிறது. இதுவும் போட்டியாளர்களிடத்தில் இருந்து கூடுதல் மதிப்பை பெறும் விஷயமாக இருக்கும். டாப் வேரியண்ட்டில் சன்ரூஃப் கொடுக்கப்பட இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்

இந்த காரில் முன்புற இருக்கை மற்றும் பின்புற இருக்கை பயணிகள் தங்களுக்கு தேவையான அளவு வெப்ப நிலையை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

டிரைவிங் மோடுகள்

இந்த காரில் கம்ஃபோர்ட், நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று வித நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் டிரைவிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும் உள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

முக்கிய பாதுகாப்பு வசதிகள்

கார் நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், மலைப்பாதையில் காரை நிறுத்தி எடுக்கும்போது பின்னோக்கி நகராமல் தவிர்க்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

சிறப்பு அம்சங்கள்

இந்த காரில் டிஎஃப்டி திரையுடன் தகவல் வழங்கும் வசதி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தவிரவும், ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் உள்ளது. இந்த காரிந் இருக்கை 60 : 40 என்ற விகிதத்தில் மடக்கி விரிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரகத்தில் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 7, 2019, 11:19 [IST]
English summary
Here are the top features of the Mahindra XUV 300!
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+