டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

டாடா ஹாரியர் எஸ்யூவியின் நெருக்கடியால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்தது. இந்த புதிய மாடலானது W5, W9, W11 மற்றும் W11 ஆப்ஷனல் என்ற நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய மாடலில் வழங்கப்பட்டு வந்த பேஸ் வேரியண்ட் ஆப்ஷன் நீக்கப்பட்டது.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

இந்த நிலையில், பல புதிய மாடல்களின் வருகையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கான நெருக்கடி தொடர்கிறது. குறிப்பாக, சில மாதங்களுக்கு முன் வந்த டாடா ஹாரியர் எஸ்யூவியால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

இதனை மனதில் வைத்து மஹிந்திரா நிறுவனமும் தனது எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் W3 என்ற விலை குறைவான புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட்டில் பல முக்கிய வசதிகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் பனி விளக்குகள், க்ரோம் அலங்கார பாகங்கள், அலுமினிய ஸ்கிட் பிளேட் ஆகியவை இல்லை. ஸ்டீல் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

அதேநேரத்தில், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஜாக்குவார்ட் ஃபேப்ரிங் அப்ஹோல்ஸ்ட்ரி, இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

அதேபோன்று, பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு மிரர்கள், எஞ்சின் இம்மொபைலைசர், மேனுவல் ஏசி கொடுக்கப்பட்டுள்ளன. இதில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அல்லது மியூசிக் சிஸ்டம் இல்லை. ஆனால், டீலரில் வாங்கி பொருத்திக் கொள்ளலாம். போதுமான அடிப்படை வசதிகள் இருப்பது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 155 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

இந்த புதிய பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.12.23 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை பேஸ் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட்ட W5 வேரியண்ட் ரூ.12.80 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

டாடா ஹாரியரை விட குறைவான விலையில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 !

இந்த நிலையில், W3 வேரியண்ட் ரூ.58,000 வரை குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் பட்ஜெட் பிரச்னையில் இருப்பவர்களை கவரும் தேர்வாக இருக்கும். மேலும், ஹாரியர் 5 சீட்டர் மாடலாக இருக்கும் நிலையில், இது 7 சீட்டர் மாடல் என்பது கூடுதல் வலு சேர்க்கும் விதமாக கருதலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 16:42 [IST]
English summary
The Mahindra XUV500 W3 variant has been launched in the Indian market at a price of Rs 12.28 lakh (ex-showroom). The W3 is now the base variant in the Mahindra XUV500 variant line-up and it comes with the least number of features. This is because it was made with the purpose of undercutting the Tata Harrier's price.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+