குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

மிக குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி ஹூண்டாய் நிறுவனம் செக் வைத்துள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனமும் அதிரடி காட்ட தயாராகி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால், மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் விற்பனை அமோகமாக உள்ளது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

அதே சமயம் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வழங்க வல்லது. பெட்ரோல், டீசல் என இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே தற்போதைய நிலையில் வழங்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

இந்த சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஏஎம்டி (Automated Manual Transmission) வேரியண்ட் மார்க்கெட்டில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தேதி அல்லது தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் நடப்பு 2019ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், எக்ஸ்யூவி300 காரின் ஏஎம்டி வேரியண்ட்டை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

எக்ஸ்யூவி300 காரின் ஏஎம்டி வேரியண்ட்டை தற்போது மஹிந்திரா நிறுவனம் சோதனை நிலையில் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேனுவல் வெர்ஷன்களை காட்டிலும் இதன் விலை ரூ.60,000-70,000 வரை அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

அதேபோல் 6 ஸ்பீடு ஏம்எம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நிலையில், W4, W6, W8 மற்றும் W8 (O) என மொத்தம் நான்கு ட்ரிம்களில் எக்ஸ்யூவி300 கிடைக்கிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

ரூ.7.90 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் வரையிலான விலைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மஹிந்திரா தார் 700 சிக்னேச்சர் எடிசனை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுதவிர ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 மற்றும் தார் ஆகிய கார்களின் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

இதில், ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறன்றன. அதன் ஸ்பை படங்களும் கூட சமீபத்தில் வெளியாயின. இந்த மூன்று புதிய மாடல்களும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

இதனிடையே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட ஹூண்டாய் நிறுவனம் மலிவான விலையில் வெனியூ காரை அறிமுகம் செய்து போட்டியை அதிகரிக்க செய்துள்ளது.

குறைவான விலையில் புதிய காரை களமிறக்கி செக் வைத்த ஹூண்டாய்... அதிரடி காட்ட தயாராகும் மஹிந்திரா

வெனியூ காரின் ஆரம்ப விலை 6.50 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. இப்படிப்பட்ட சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரில் ஏஎம்டி ஆப்ஷன் இல்லாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. வாடிக்கையாளர்களும் அதனை எதிர்பார்த்து கொண்டுதான் உள்ளனர். அவர்களின் குறை வெகு விரைவில் நிவர்த்தியாக போகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2019, 19:50 [IST]
English summary
Mahindra XUV300 AMT Launch Details. Read in Tamil
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+