26.000 யூனிட்டுகளை கடந்த முன்பதிவு : விற்பனையில் மாஸ் காட்டும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் எக்ஸ்யூவி 300 காரின் முன்பதிவு 26,000 யூனிட்டுகளை கடந்து விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாவது பெரிய விற்பனையாக இது பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் காம்பெக்ட் எக்ஸ்யூவி 300 கார் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகமானது. சாங்யாங் டிவோலி காரின் பிளாட்பார்ம் அடிப்படையில் எக்ஸ்யூவி 300 கார் உருவாக்கப்பட்டது. அறிமுகமான இரண்டே மாதங்களில் எக்ஸ்யூவி 300 கார்கள் 26,000 யூனிட்டுகளை கடந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் எக்ஸ்யூவி 300 விற்பனையில் தனி இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவர் வீஜேய் ராம் நக்ரா கூறியபோது மஹிந்திரா காம்பெக்ட் எஸ்யுவி 300 கார் 26,000 யூனிட்டுகள் கடந்து முன்பதிவாகியுள்ளது, இது மஹிந்திரா நிறுவனத்திற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார். மேலும் எஸ்யுவி 300 காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் காரின் டிசைன் இவைதான் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது என வீஜேய் ராம் கூறினார்.

எக்ஸ்யூவி 300 W4, W6, மற்றும் W8 என மூன்று வேரியண்டில் விற்பனையாகிறது. முன்பதிவான 26,000 யூனிட்களில் டாப் வேரியண்ட் எக்ஸ்யூவி 70 சதவீதம் முன்பதிவாகியுள்ளது என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று வேரியண்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. குறிப்பாக W8 வேரியண்ட் விருப்ப பேக் எனும் வாடிக்கையாளர் விருப்ப தேர்வில் வருகிறது.
| Variants | Petrol | Diesel |
| W4 | Rs 7,90,000 | Rs 8,49,000 |
| W6
| Rs 8,75,000 | Rs 9,30,000 |
| W8 | Rs 10,25,000 | Rs 10,80,000 |
| W8 OPT | Rs 11,49,000 | Rs 11,99,000 |
*Ex-Showroom Delhi

எக்ஸ்யூவி 300 காரில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், எலெக்ட்ரானிக் மற்றும் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் காரின் இன்டிரியரில் மஹிந்திரா புளூ சென்ஸ் அப்ளிகேஷன் அடங்கிய 7.0 அங்குல டச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது . மேலும் இதில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன. இந்த ககாரின் சிறப்பு பாதுகாப்பு அம்சமாக 7 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

காம்பேக்ட் ரக எக்ஸ்யூவி 300 கார்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனையாகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரின் சக்தி வாய்ந்த பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் அளிக்கிறது. மேலும் இதன் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கிய மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் எக்ஸ்யுவி 300 விற்பனையில் மாஸ் காட்டி வருகிறது. இதனால் மாருதி, டாடா போன்ற மஹிந்திராவின் போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன. 26,000 யூனிட்டுகளுக்கு மேல் எக்ஸ்யூவி 300 இதேபோல் விற்பனை நீடித்தால் போட்டி நிறுவனங்களை விற்பனையில் வீழ்த்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








