மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

வரும் பிப்ரவரி 15ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவிக்கு மஹிந்திரா டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.20,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. இந்த புதிய எஸ்யூவி ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது சாங்யாங் டிவோலி அடிப்படையில் உருவாக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல். டிவோலி எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்கள் இருந்தாலும், முற்றிலுமாக குட்டி எக்ஸ்யூவி500 எஸ்யூவியாக இது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

மேலும், இந்த ரக எஸ்யூவி மாடல்களில் மிக நீளமான வீல் பேஸ் கொண்ட மாடல் என்பதால், பின் இருக்கையில் மிக சிறப்பான இடவசதியையும் எதிர்பார்க்க முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியானது W4, W6, W8 மற்றும் W8(O) ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 8.0 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கேமரா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது!

இது பேபி எக்ஸ்யூவி500 மாடலாக குறிப்பிடுவதால், வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2019, 11:20 [IST]
English summary
Mahindra XUV 300 bookings have officially begun for an amount of Rs 20,000. The bookings for the XUV 300 are now available across all company dealerships across the country and online as well.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+