மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடல், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலானது S-210 என்ற குறியீட்டுப் ப

பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலும் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி ரக கார் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வந்திருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

இந்த நிலையில், நேற்று நடந்த அறிமுக விழாவின்போது மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார கார் மாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ பதில் அளித்தார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

அப்போது," மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு இரண்டாவது அரையாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

அதாவது, அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மாடலானது S-210 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த எஸ்யூவி மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் என்பதால் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

இந்த காருக்கான பேட்டரி இந்திய சீதோஷ்ண நிலை மற்றும் சாலை நிலைகளுக்கு உகந்த அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனம் இந்த பேட்டரியை தயாரித்து சப்ளை செய்ய இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

மேலும், இந்த மின்சார எஸ்யூவி மாடலானது இரண்டு விதமான பேட்டரி திறன் கொண்டதாக கிடைக்கும். ஒன்று சாதாரண பயன்பாட்டிற்கு தக்கதாகவும், மற்றொன்று அதிக திறன் வாய்ந்த நீண்ட தூர பயணத்திற்கு மாடலாகவும் இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் உறுதியானது!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், ரூ.25 லட்சம் என்ற ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் கோனாவுடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடல் விலை குறைவானதாக இருக்கும். ரூ.20 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 15, 2019, 10:44 [IST]
English summary
Mahindra Automotive has launched the much-awaited XUV300 at a compelling starting price of Rs 7.90 lakh ex-showroom (India). The new Mahindra XUV300 is arguable the best sub-four-metre compact-SUV you can buy today and bookings for it are going strong as well. The company expects the XUV300 to sell in record figures in the coming months.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+